செந்தில் பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை! கையெழுத்திட சென்றபோது மடக்கிய காவல்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இருவரும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர். கையெழுத்திட வந்த செந்தில் பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டார். செந்தில் பாலாஜி தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.

Senthil Balaji Triplicane Police Station DMK

நேரில் சென்று கையெழுத்திட்டார்

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தான் நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி, அசோக் குமார் முன் ஜாமீன் பெற்றனர். அப்போது நீதிபதி, இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதன்படி இன்று காலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

செந்தில் பாலாஜியிடம் விசாரணை

சுமார் 10.30 மணியளவில் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்தனர். இந்த வழக்கில் ஐஓவாக உள்ள காவல் ஆய்வாளர் ரஜனி முன்பு ஆஜர் ஆகி இருவரும் கையெழுத்து இட்டனர். இந்த நிலையில் காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியிடம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். கையெழுத்து இட வந்த செந்தில் பாலாஜியிடம் துணை ஆணையர் விசாரணை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+