கெத்து "தளபதி".. பறித்தவர் கையாலேயே பதவி பிரமாணம்.. இப்படியும் கொண்டாடும் திமுகவினர்!
சபாநாயகர் முன்னிலையில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி பதவி ஏற்றுக் கொண்டார்.
Recommended Video
சென்னை: திமுக தொண்டர்கள் ஏகப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள். தங்களின் உணர்வுகளை ட்விட்டர் பக்கங்களில் குதூகலத்துடன் பதிவிட்டும் வருகிறார்கள். என்ன காரணம் தெரியுமா? எல்லாம் நம்ம சபாநாயகரால்தான்!
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிகரமான தோல்வியை திமுக பெற்றிருப்பினும், வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளது. இதில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 13 எம்எல்ஏக்களும் நேற்று சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் அமர்ந்திருக்க, சபாநாயகர் தனபால் ஒவ்வொருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு வழங்கிய 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 18 பேரில் ஒருவராக செயல்பட்டவர்தான் செந்தில் பாலாஜி. அதனால்தான் அன்று அவரது பதவியும் பறிக்கப்பட்டது. அதை பறித்தது சபாநாயகர் தனபால்தான்!
பதவி பறித்தவர் கையாலேயே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்ய வைத்து, கெத்தாக அமர்ந்திருக்கும் தளபதி...! 💪 💪
— நித்யா (@nithya_shre) May 28, 2019
இந்த முறை இவர்கள் திமுக எம்எல்ஏக்கள்! 😍#DMKMLAs #DMK4TN @mkstalin pic.twitter.com/m0eedpVjZi
இப்போது இதே சபாநாயகர் செந்தில் பாலாஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததுதான் ஹைலைட் ஆகி உள்ளது. இது திமுகவினருக்கு பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. இது சம்பந்தமான போட்டோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதில், செந்தில்பாலாஜிக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்ய, அதனை பக்கத்தில் உட்கார்ந்து ஸ்டாலின் பார்ப்பது போல போட்டோக்கள் வைரலாகி உள்ளன. மேலும், "பதவி பறித்தவர் கையாலேயே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்ய வைத்து, கெத்தாக அமர்ந்திருக்கும் தளபதி...! 💪 💪 இந்த முறை இவர்கள் திமுக எம்எல்ஏக்கள்!" என்றும் பதிவிட்டு உள்ளனர்!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications