Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சித்துறை, செய்தித்துறை..தயாரான பட்டியல்..! மாண்புமிகு ஆகிறார் உதயநிதி? ஓகே சொன்ன முதல்வர்.?

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக இளைஞரணி தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, இன்னும் சில நாட்களில் அவருக்கு உள்ளாட்சி துறை அல்லது செய்தித்துறை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிறைவேறவில்லை. ஆனாலும் அவர் அமைச்சராவது உறுதி என கழக மூத்த உடன்பிறப்புகள் கூறி வந்தனர். அதைப்பற்றிய பேச்சுகளும் தற்போது அதிகமாக உள்ளதை அனைவருக்கும் தெரிந்ததே..

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி


அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கிச் செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்படுகிறார். சட்டப் பேரவையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை புகழ்வதை போலவே மூத்த அமைச்சர்களை உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி உதயநிதி ஸ்டாலினை சட்டசபையில் வெகுவாகப் பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் ஆதரவு

கட்சியில் ஆதரவு

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என கூறியது முதன் முதலில் அவரது பால்ய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான். அவர் அமைச்சர் ஆனதுக்கு காரணம் உதயநிதி என்பதும், அன்பில் மகேஷுக்கு பதவியை பெற்று தர அவர் உறுதியாக நின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதை அடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர் , ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும் அவரை அமைச்சராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இப்படி பல அமைச்சர்களும் உதயநிதியை அமைச்சராக வேண்டும் எனக் கூறி வந்த நிலையில் அவர் அமைச்சராவது 100% உறுதியாகி உள்ளது.

இறுதி முடிவு

இறுதி முடிவு

அதே நேரத்தில் ஏற்கனவே இருக்கும் அமைச்சரிடம் இருந்து ஒரு பதவியை எப்படி உதயநிதிக்கு வழங்குவது என்ற குழப்பத்தின் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டாலும் தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மூத்த அமைச்சர் மற்றும் நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இரு துறைகள் அல்லது ஒரு துறையை ஒதுக்கலாம் என கூறப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

உள்ளாட்சி துறை அமைச்சர்

உள்ளாட்சி துறை அமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் தந்தை ஸ்டாலின் முதலில் திமுக இளைஞரணி தலைவராகவும் , பின்னர் செயல் தலைவர் , தலைவர் என்ற பொறுப்புகளை பெற்றார். அதேபோல் சென்னை மேயர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் என அடுத்தடுத்த பதவிகளையும் பெற்றார். தந்தை வழியில் உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்னர் துணை முதல்வர், முதல்வர் என்ற அளவுக்கு உயர வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்தித்துறைக்கும் வாய்ப்பு?

செய்தித்துறைக்கும் வாய்ப்பு?

அதேபோல இளைஞரணி தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் வகித்து வந்த இளைஞர் அணி திருப்பூரைச் சேர்ந்த அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதே பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. எனவே அதே பாணியில் சாமிநாதன் வகித்து வரும் செய்தித் துறை அமைச்சர் பதவி உதயநிதிக்கு ஒதுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எது எப்படி என்றாலும் இந்த இரண்டு துறைகளில் ஒரு துறை உதயநிதிக்கு ஒதுக்கப்படுவது உறுதி என திமுகவினர் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+