தொகுதி மாறணுமோ! எனக்கு பயமா இருக்கு! கிருத்திகா பற்றி திடீரென பேசிய உதயநிதி ஸ்டாலின்.. என்னாச்சு?
சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி கிருத்திகா உதயநிதி குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகி வருகிறது.
Recommended Video

சர்வதேச கழிப்பறை திருவிழா 2022 சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இருக்கும் பல்வேறு பள்ளிகளில் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கழிப்பறை திருவிழா - தீர்வுக்கான களம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் வீடியோவை வெளியிட்டு இருந்தார். பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று கக்கூஸ் என்ற செயலியை உதயநிதி ஸ்டாலின் சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூர் நிகழ்ச்சி
மயிலாப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் என் மனைவி கிருத்திகா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்னை விட சேப்பாக்கம் தொகுதியில் அவர்தான் அதிகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார். ஒரு சின்ன பயமும் எனக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நான் தொகுதி மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது.

கிருத்திகா உதயநிதி
நான் வேறு ஏதாவது தொகுதிக்கு மாற வேண்டுமோ என்ற பயம் உள்ளது. அந்த அளவிற்கு சிறப்பாக பணிகளை செய்து வருகிறது. தொகுதியில் என்னை விட சிறப்பாக அவர்தான் செயல்படுகிறார். நான் இப்படி பேசுகிறேன் என்றதும், அவர் என்னை கீழே இருந்து பார்த்து முறைத்துக்கொண்டு இருக்கிறார், என்று உதயநிதி கிண்டலாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டார்.

அரசியல் இல்லை
உதயநிதி இதை கிண்டலாக குறிப்பிட்டு இருந்தாலும், கிருத்திகா உதயநிதி அரசியலில் களமிறங்குகிறாரா என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். கிருத்திகா உதயநிதி இதுவரை அரசியல் தொடர்பாக பேசியது இல்லை. அவர் தற்போது இயக்குனராக இருக்கிறார். காளி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications