ஜனவரி 10ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்! முக்கிய அறிவுரைகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ஜனவரி 10ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் சட்டமன்ற கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
''மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 10.01.2023 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.''
''அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு கொறடா கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கும் நிலையில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் சில முக்கியமான அறிவுரைகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
சபையின் மாண்பை காப்பது குறித்தும், ஆளுநர் உரை மீதான விவாதங்களில் பங்கேற்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விரிவாக பேசப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே திமுகவை போலவே அதிமுகவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை வரும் 8ஆம் தேதி மாலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications