சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’காவி வேட்டி’ நீங்க சைவமா? வைணவமா? திடீர் கேள்வி கேட்ட ஆ.ராசா! சட்டென திரும்பி பார்த்த சேகர் பாபு!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும்விழா மற்றும் சமூக நீதி விழாவில் பேசிய ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபுவை சைவமா? வைணவமா? எனக் கேட்டதோடு, காவி வேட்டி கட்டினாலும் அவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க என கூறுகிறார் என்றார்

சென்னை புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும்விழா மற்றும் சமூக நீதி விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புண்ணியம் தரும் புரட்டாசி..ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து புண்ணியம் தரும் புரட்டாசி..ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து

ஆ.ராசா

ஆ.ராசா

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மேடையில் பேசுகையில்," சேகர்பாபுவை சைவம் சமயம் என்று நினைக்கிறேன் என்று மேடையில் உள்ள சேகர்பாபுவை பார்த்து கேட்டார். (எல்லாம் ஒன்று தான் என்பதுபோல் சேகர்பாபு கை அசைத்தார்.) ஆனால் இந்து மதப்படி சைவம் என்றால் சிவன் வழிபாடு, வைணவம் என்றால் திருமால் வழிபாடு செய்யவேண்டும். ஆனால் சேகர்பாபு சிவனையும் வணங்குகிறார்,திருமாலையும் வணங்குகிறார் பெரியாரியும் பேசுகிறார். இதனால் தான் எல்லோருக்கும் கோபம் வருகிறது.காவி வேட்டி கட்டுகிறார் பட்டை அடித்துக் கொள்கிறார் ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க என கூறுகிறார். என்பதால்தான் அவர்களுக்கு வயிறு எரிகிறது.

பெண்களுக்கு சொத்துரிமை

பெண்களுக்கு சொத்துரிமை

பெண்களுக்கான சொத்துரிமை அறிவிக்கப்பட்டது பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பின் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும்போது இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பி வந்து விடுவாள் அப்போது தயக்கத்துடனேயே அவள் அங்கே இருப்பாள். ஆனால் இப்போதெல்லாம் அண்ணன் வீட்டிற்கு சென்று பெண்கள் மூன்று நாள் தங்கியிருந்தாலும் அண்ணன் வீட்டில் உள்ளவர்கள் தான் பயம் கொள்கிறார்கள் சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுவாள் என்று பயம் கொள்கிறார்கள். பெண்களுக்காக சொத்துரிமை வேண்டாம் என்று அம்பேத்காரை சட்டம் நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.

சேகர் பாபு

சேகர் பாபு

15.10.1951 ம் ஆண்டு தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அம்பேத்காரின் கனவை நினைவாக்கியவர் கருணாநிதி. எல்லோரும் சமமில்லை என்றால் ஆரியம்.எல்லோரும் சமம் என்றால் திராவிடம்.அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகலாம் என்று திராவிட இயக்கத்தின் கொள்கையின் படி சேகர் பாபு சட்டத்தை நிறைவேற்றினார். சேகர் பாபு கூறலாம் எல்லாம் ஆண்டவரின் விதி என்று ஆனால் நாங்கள் சொல்ல முடியாது என்றார். சாதி கோவிலுக்குள் தான் உள்ளது என்று பேசியவர் பெரியார்.

நாங்களும் இந்துக்கள் தான்

நாங்களும் இந்துக்கள் தான்

தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளில் இங்குள்ள மக்களுக்கு திராவிட இயக்கத்தை தவிர நல்லது செய்தது யார்?
50 சதவீத இந்துக்கள் படிக்க கூடாது ,பள்ளிக்கூடம் போகக்கூடாது என்ன மூணு சதவீத இந்துக்களே அதனை தடுத்து நிறுத்தினார்.எந்த இஸ்லாமியரும் இந்துக்கள் படிக்க கூடாது என வழக்குப்போடவில்லை என்றார்.இன்று முதல் சனாதன இந்து நமக்கு எதிரி. சபிக்கப்பட்ட சாதாரண இந்துக்களுக்கு நாங்கள் தான் எல்லாம். 'Yes we are the hindu' நாங்களும் ஹிந்துக்கள் தான், ஆனால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இந்துக்கள்.சனாதன ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள்" என்றார்.

English summary
A Raja, who spoke on behalf of Chennai East District DMK in Pulianthop, Chennai at the three-year anniversary and social justice function, asked Minister Sekar Babu a saiva ? Vaishnavism? He asked and said, "Long live Muthuvel Karunanidhi Stalin, even though he is wearing saffron.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X