தமிழக எம்பிக்களை நம்பி இருக்கோம்! புகழ்ந்த கர்நாடக பெண்.."சிஸ்டர்".. திமுக எம்பி சொன்ன அசத்தல் பதில்
சென்னை: தமிழ்நாடு எம்பிக்கள் குறித்து கர்நாடகாவை சேர்ந்த பெண் வைத்த கருத்துக்கு திமுக எம்பி எம்எம் அப்துல்லா பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு எம்பிக்கள் நேற்று லோக்சபாவில் பல முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து குரல் எழுப்பினர். ராஜ்ய சபாவில் நேற்று தமிழ்நாடு எம்பிக்கள் எல்லோரும் நீட் விலக்கு குறித்து ஒரு பக்கம் கோஷம் எழுப்பினார்கள்.
நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று அவையில் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் பொது பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

ஜிஎஸ்டி
திமுக எம்பிக்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களாக அவையில் ஜிஎஸ்டி இழப்பு குறித்து பேசி வருகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாலையில் இருந்து நீட் தேர்வு குறித்த விவாதம் தமிழ்நாடு எம்பிக்கள் மூலம் அவையில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று திமுக எம்பி வில்சன் ராஜ்ய சபாவில் முக்கியமான தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று மசோதாவை தாக்கல் செய்தார்.

தனி நபர்
பொதுவாக தனி நபர் மசோதாக்கள் பெரும்பாலான நேரங்களில் வெற்றிபெறாது. திமுக எம்பி திருச்சி சிவா மூன்றாம் பாலினத்தவர் உரிமைக்காக 2015ல் கொண்டு வந்த தனி நபர் மசோதா சட்டம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தற்போது எம்பி வில்சன் கொண்டு வந்து இருக்கும் தனி நபர் மசோதா கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் தமிழ்நாடு எம்பிக்களை பாராட்டி ட்விட் செய்து இருந்தார்.

பாராட்டி ட்விட்
அதில், திமுகவை சேர்ந்த தமிழ்நாடு எம்பிக்கள் பல முக்கிய விஷயங்களை பாராளுமன்றத்தில் எழுப்பி வருகிறார்கள். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் கர்நாடக எம்பிக்கள் நம்முடைய மாநிலத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை கேட்க கூட அஞ்சுகிறார்கள். நம்முடைய அடிப்படை தேவைக்கு கூட நாம் அண்டை மாநில எம்பிக்களை நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

பதில்
இதற்கு திமுக எம்பி அப்துல்லா பதில் அளித்துள்ளார். அதில், சிஸ்டர், நாங்கள் தமிழ்நாட்டிற்காக மட்டும் குரல் கொடுக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை. மொத்த தென்னிந்திய உரிமைக்காகவும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். நாம் எல்லோரும் திராவிடர்கள். உங்களுடைய உணர்வுகளை நாங்களும் புரிந்து கொள்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்காகவும் போராடுவோம். கவலைப்பட வேண்டாம், என்று பதில் அளித்துள்ளார்.

என்ன பேசினார்
திமுக எம்பி அப்துல்லா கூறியது போல நேற்று கர்நாடக மாநில பிரச்சனைகளை தமிழ்நாடு எம்பிக்கள் அவையில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அவையில் பேசிய திமுக எம்பி செந்தில் குமார், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கர்நாடக ஹிஜாப் பிரச்சனை பற்றி பேசினர். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். இது தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது. இதை உடனே கல்லூரி நிர்வாகங்கள் நிறுத்த வேண்டும். அந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு!












Click it and Unblock the Notifications