இவரெல்லாம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா?.. சந்தேகமா இருக்கே.. அண்ணாமலையை வாரும் திமுக எம்பி
சென்னை: ஒரு பெண்ணின் வீட்டருக்கே ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்த விவகாரம் குடியிருப்பில் தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான பிரச்சினை என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதை திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்துள்ளார்.
கார் பார்க்கிங் தொடர்பாக 62 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகத்திற்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் டாக்டர் சுப்பையா சண்முகம் அந்த பெண்ணின் வீட்டு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு சென்ற புகைப்படங்கள், சிசிடிவி ஆதாரத்துடன் வெளியானது.
மேலும் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்திய மாஸ்க்குகளையும் அந்த பெண்ணின் வீட்டு வாசலில் போட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் சுப்பையா மீது புகார் அளித்தார். இதையடுத்து அவர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரினார்.

கொரோனா
ஒரு அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு கொரோனா காலத்தில் பொறுப்புள்ள மருத்துவர் பணியை செய்யும் சுப்பையா இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மனுஸ்மிருதி விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏபிவிபி தலைவர்
சுப்பையா சண்முகத்தை எதுவும் செய்யாமல் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் , பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் விவகாரம் என்பது குடியிருப்பில் தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடந்த பிரச்சினை.

வழக்குப் பதிவு
அது சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டது. திருமாவளவன் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இவர் எல்லாம் ஒரு IPS போலீஸ் அதிகாரி????

சுப்பையா சண்முகம்
ஒரு போலீஸ் அதிகாரியாக வழக்குகளை எவ்வாறு கையாண்டிருப்பார் என்பதில் கடுமையான சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார். படிக்காதவர்கள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை செய்த சுப்பையா சண்முகத்தின் செயலை அண்ணாமலை சாதாரணமாக எடுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications