பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா! வீர வாள் ஏந்தி நின்ற கனிமொழி! பின்னணி என்ன?
சென்னை: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கனிமொழிக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பரலூர், மதுரை என 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்கள் அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்களின் ஆதரவை பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் போட்டிபோடும்.

முத்தரையர் பிறந்தநாள்
பேரரசன் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முத்தரையர் பிறந்தநாள் விழாவுக்கு திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் ரீதியாக
இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முத்தரையர் சமுதாய சங்கத்தினர் கனிமொழிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை அழைத்து முத்தரையர் பிறந்தவிழாவை நடத்தியிருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் அரசியலும் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆள் உயர ரோஜாப்பூ மாலை, வீர வாள் என கனிமொழிக்கு கொடுத்து அவரை சிறபித்த நிகழ்வும் நடந்துள்ளது.

அமைச்சர் மெய்யநாதன்
முத்தரையர் சமுதாயப் பிரதிநிதியாக தமிழக அமைச்சரவையில் மெய்யநாதன் இடம்பெற்றிருந்தாலும் கூட, அவரைக் காட்டிலும் கனிமொழிக்கு முத்தரையர் சமுதாய மக்கள் கொடுத்த முக்கியத்துவம் அரசியல் ரீதியாக பேசு பொருளாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு அடையாளத்திற்குள் சிக்கி குறுகிய எல்லைக்குள் அரசியல் செய்ய விரும்பாத கனிமொழி, இனி வரும் நாட்களில் இது போன்ற பல நிகழ்ச்சிகளில் மேடையேறும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனிமொழி பேச்சு
பேரரசன் பெரும்பிடுகு முத்தரையர் குறித்து பேசிய கனிமொழி சமஸ்கிருத மொழியை உயிர்பிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்டார். பேசவே ஆள் இல்லாத ஒரு மொழியாக சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடி கோடியாக பணம் செலவழித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார். மேலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications