சோனியாவுக்கு கனிமொழி கொடுக்கும் மதிய விருந்து! திருநெல்வேலி அல்வா.. ஆம்பூர் பிரியாணி! நாவூறும் மெனு!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்துள்ள சோனியா காந்திக்கு கனிமொழி எம்.பி. இன்று மதிய விருந்து கொடுக்கிறார்.
இந்த விருந்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இதனிடையே இன்று காலை முதலே சென்னையில் தங்கியுள்ள சோனியா காந்தியை பார்க்க தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் குவிந்துள்ளனர்.

திமுக மகளிர் உரிமை மாநாடு இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு சென்னை வந்த சோனியா காந்திக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கே நேரடியாக சென்று சோனியா காந்தியை வரவேற்றார்.
சோனியா காந்தி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு முதலில் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள தயங்கியிருக்கிறார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி நடத்தப்படும் மகளிர் உரிமை மாநாடு என்பதாலும், கனிமொழியின் அழைப்பை நிராகரிக்க விரும்பாமலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கும் வந்துவிட்டார்.
இதனால் கனிமொழி எம்.பி. ஹேப்பி. இந்நிலையில் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்களுக்கு சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் கனிமொழி இன்று மதிய விருந்து கொடுக்கிறார். அதில் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் முதல் நேட்டிவ் ஸ்பெஷல் எனப்படும் ஒவ்வொரு ஊரிலும் பெயர் பெற்ற உணவு வகைகள் வரை இடம்பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் திருநெல்வேலி ஹல்வா, ஆம்பூர் பிரியாணி என எக்கச்சக்கமான உணவு வகைகள் கனிமொழி கொடுக்கும் விருந்து மெனுவில் இடம்பெற்றுள்ளன. சோனியா காந்திக்கு கனிமொழி கொடுக்கும் மதிய விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications