மறுபடியும் சின்னவரா?.. மனசு புண்படுது பாருங்க.. போஸ்டரில் உதயநிதி.. திமுக எம்பி சொன்ன பரபர பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக எம்பி எம்எம் அப்துல்லா போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டருக்கு அவர் அளித்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது.

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. முக்கியமான துறை ஒன்று அவருக்கு ஒதுக்கப்படலாம், விரைவில் அமைச்சரவையில் இதற்காக மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதோடு சிட்டிங் அமைச்சர்கள் சிலரும் கூட உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

உதயநிதி அமைச்சர்

உதயநிதி அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றப்படலாம், டிஆர்பி ராஜா, உதயநிதி போன்ற இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க கட்சி ரீதியாகவும் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலரோ உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

 உதயநிதி போட்டோ திமுக

உதயநிதி போட்டோ திமுக

இதனால் திமுக கட்சி போஸ்டர்களில் இப்போதெல்லாம் உதயநிதி போட்டோ பெரிதாக இடம்பெற தொடங்கி உள்ளது. திமுக நிர்வாகிகள் இதை பெரிதாக விமர்சனம் செய்வது இல்லை என்றாலும் மாறாக எதிர்க்கட்சிகள் சில உதயநிதி முன்னிறுத்தப்படுவதை விமர்சனம் செய்து வருகிறார்கள். கட்சியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், திமுகவில் உதயநிதிக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் தரப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

எம்எம் அப்துல்லா

எம்எம் அப்துல்லா

இந்த நிலையில்தான் திமுக எம்பி எம்எம் அப்துல்லா போட்ட போஸ்டர் ஒன்றும் இதே போன்ற விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் வாழ்த்து கூறி திமுக எம்பி எம்எம் அப்துல்லா போஸ்டர் வெளியிட்டு இருந்தார். இதில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அதேபோல் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இதில் இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இதையடுத்து சிலர் இந்த போஸ்டரை ஷேர் செய்து பாருங்கள் உதயநிதிக்கு எம்எம் அப்துல்லா எப்படி முன்னுரிமை கொடுக்கிறார் என்று விமர்சனம் செய்து இருந்தனர். எதிர்க்கட்சியினர் சிலர் உதயநிதி முன்னிறுத்தப்படுத்தப்படுவதை விமர்சனம் செய்து இருந்தனர். ஒரு நபர் கிண்டலாக.. என்ன மறுபடியும் சின்னவர் போட்டோவை போட்டு இருக்கீங்க.. உணர்வாளர்களின் மனது என்ன பாடு படும்? என்று கேட்டார்.

எம்எம் அப்துல்லா ஸ்டாலின்

எம்எம் அப்துல்லா ஸ்டாலின்

இவர் எழுப்பிய கேள்விக்கு கிண்டலாக பதில் சொன்ன திமுக எம்பி எம்எம் அப்துல்லா, செஞ்சதே அதுக்குதான் சார்!!! அதையும் குறை சொல்றீங்களே . இப்ப என் மனசு புண்படுது பாருங்க , என்று குறிப்பிட்டார். அதாவது சிலரின் மனசு புண்பட்டால் படட்டும் என்றுதான் உதயநிதி போட்டோவை பயன்படுத்தியதாக எம்எம் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இவரின் விளக்கம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதற்கு முன்பு மாநிலங்களவையில் திமுக எம்பி கேஆர்எம் ராஜேஷ்குமார் உதயநிதியை பாராட்டி இருந்தார். திமுகவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் உரிய முன்னுரிமை தர வேண்டும் என்று விரும்புபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+