யாரை அமைச்சராக்கனும்னு முதலமைச்சருக்கே பாடம் எடுக்குறாங்க - வெடித்து தள்ளிய திமுக எம்பி அப்துல்லா
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து இருக்கும் நிலையில் திமுக எம்பி எம்.எம். அப்துல்லா கருத்து சொல்பவர்களை விமர்சித்து இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "நம் மக்களுக்கு சிலநேரங்களில் தங்களைப் பற்றிய சுயமதிப்பீடு கற்பனைக்கு அப்பால் இருக்கும். எதிரில் இருக்கும் நபரை விட தனக்கு அதிகம் தெரியும் என உறுதியாக நம்புவார்கள்!! இதன் தொடர் செயற்பாடாக துறைசார் நிபுணர்களுக்கும் பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
வாழ்நாளில் ஒருமுறை கூட கியர் மாற்றியிராத ஒருவர் பத்து லட்சம் கிலோமீட்டர் வாகனம் ஓட்டிய தொழில்முறை டிரைவருக்கு எப்படி கார் ஓட்ட வேண்டும் என பாடம் எடுப்பார். பள்ளிக்குச் சென்றால் அங்கிருக்கும் ஆசிரியருக்கு எப்படி கற்றுக் கொடுக்கவேண்டும் என கற்றுக் கொடுப்பர். பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களிடம் தங்கள் பசுமை விகடன் மேட்டிமைத்தனத்தை காட்டுவார்கள்.

இவர்களை மருத்துவமனைகளில் அடிக்கடி காணலாம். மருத்துவருக்கு எப்படி மருத்துவம் பார்க்க வேண்டும் என டிப்ஸ் கொடுப்பார்கள்.
உணவகங்களின் புகழ்பெற்ற சமையல் கலைஞருக்கு ரெசிப்பி சொல்லித்தருவார்கள். (விமர்சனம் வேறு, பாடம் எடுப்பது வேறு - உணவு நன்றாக இருக்கிறதா இல்லையா எனக் கூறுவது விமர்சனம் அதை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் எப்படி சமைக்க வேண்டும் எனச் சொல்லித்தருவதற்கு கொஞ்சமாவது நிபுணத்துவம் வேண்டும்)
இன்னும் சிலர் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே எல்லா குடும்ப பிரச்சனைகளுக்கும் அறிவுரையை தூக்கிக் கொண்டுவருவார்கள். ஊதாரிகள் எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் என வகுப்பெடுப்பார்கள். வேலைக்கே செல்லாதவர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என கற்றுக் கொடுப்பார்கள்.
திருச்சியை தாண்டாதவர் வெளிநாட்டில் எப்படி சூதானமாக பிழைக்க வேண்டும் என ஆத்திக் கொண்டிருப்பார்கள். நாம் அனைவருமே இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகியிருப்போம். மொழிப்படத்தில் வரும் எம்.எஸ் பாஸ்கர் போல எல்லாம் தெரிந்த மாதிரி இவர்கள் பாடம் எடுப்பதைக் கேட்க இரிட்டேடிங்காக இருக்கும்.
ஆனால் நாகரீகம் கருதி, சில இடங்களில் அவர்களின் கபடமற்ற நோக்கம் கருதி அமைதியாக சென்றுவிடுவோம். ஒருமுறை யூடியூப் சேனல் வைத்திருக்கும் நண்பரிடம் மற்றொரு யூடியூபர் வந்து எப்படி சப்ஸ்கிரைபர்ஸை அதிகமாக்குவது என அறிவுரை கூறினார். இதை "நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது" என்று இவர் திரும்பிக் கேட்டார். "முயற்சித்தேன் ஆனால் ரிசல்ட் இல்லை"என்றார்.
உடனே நண்பருக்கு வந்ததே செம கோபம் "ஏன்டா மயி****** " என ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வறுத்துத் தள்ளிவிட்டார். இப்படியும் சில இடங்களில் ரியாக்சன் இருக்கும். அதையும் தவிர்க்க இயலாது. இந்த நீண்ட நெடிய பாடம் எடுக்கும் பட்டியலில் இப்போது புதிதாக ஒன்று இணைந்துள்ளது... ''யார் யாரை அமைச்சர் ஆக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பாடம் எடுப்பது'' என்று பதிவிட்டு உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications