வாட்ஸ் அப், பேஸ்புக்குல கட்சி நடத்துனா எப்படி தெரியும்..? பாஜக புகாருக்கு என்.ஆர்.இளங்கோ பதிலடி!
சென்னை: "மக்களோடு பணியாற்றக் கூடிய அரசியல் கட்சியினர் அனைவருக்கும் இது தெரியும். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துவபர்களுக்கு அது தெரியாது" எனச் சாடியுள்ளார் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி சுமார் 20 நிமிடங்கள் செயல்படாதது தொடர்பாக, இதுபோல் வேறு எங்கும் நடக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. இதையடுத்து திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, கோவையில் வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ, "வாக்காளர் பட்டியல் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன் படி தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிப்பது தேர்தல் ஆணையத்தின் முழு பணியாகும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது.
வாக்காளர் பட்டியலை ஆண்டுதோறும் சீரமைத்துக் கொண்டே வருவார்கள். தேர்தல் வரும் ஆண்டில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அதே போல், பெயர் சேர்த்தல், திருத்த, நீக்கம் ஆகியவற்றைச் செய்வதற்காக 4 வாரங்கள் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்துகின்றனர்.
அதில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள், பெயர்சேர்ப்பு, பெயர் நீக்கம் குறித்து கோரிக்கை விடுக்கலாம். வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கு முந்தைய நாள் வரை வாக்காளர்கள் பட்டியலில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையமே சொல்லி உள்ளது. தங்கள் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்வது வாக்காளர்களின் கடமை.
அதேபோல, அரசியல் கட்சியினரும், வாக்காளர்கள் அனைவரின் பெயரும் இருப்பதை உறுதி செய்வது அவர்களின் கடமை. மக்களோடு பணியாற்றக் கூடிய அரசியல் கட்சியினர் அனைவருக்கும் இது தெரியும். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துவபர்களுக்கு அது தெரியாது" எனச் சாடியுள்ளார் என்.ஆர். இளங்கோ.
பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், தங்கள் தொகுதிகளில் 1 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டதாக புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம்












Click it and Unblock the Notifications