திராவிடத்தை இழிவாக விமர்சித்தால் அப்படி சொல்லுங்க.. திமுக அப்துல்லா எம்.பி. ட்வீட்டால் ரணகளம்!
சென்னை: சமூக வலைதலங்களில் திமுக மற்றும் திராவிடர் இயக்க ஆதரவாளர்களை திராவிடியா என விமர்சித்தால் பதிலுக்கு தேசிடியா என விமர்சிக்க வேண்டும் என திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பதிவிட்டிருப்பது விவாதத்துக்குரியதாகி உள்ளது.
தமிழக அரசியல் களம், சமூக வலைதளங்களில் திராவிடர் இயக்கம், திராவிட கட்சிகள், திராவிட சித்தாங்களை இரு பிரிவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பாஜக உள்ளிட்ட வலதுசாரிகள்.

வலதுசாரிகள் வசை
இந்த இரு பிரிவினரும் திராவிடர் இயக்க ஆதரவாளர்களை இழிவாக திராவிடியா எனும் சொல்லில் வசைபாடி வருகின்றனர். தமிழ்த் தேசியம் பேசிய சக்திகள் பயன்படுத்தி வந்த இந்த சொல்லை இப்போது வலதுசாரிகள் கைகளில் எடுத்துள்ளனர். இதனால் எந்த ஒரு ட்வீட் பதிவு போட்டாலும் திராவிடியா என்ற சொல்லுக்குள் பதுங்கிக் கொண்டு வலது சாரிகள் வசைபாடி வருகின்றனர்.

திமுக கொந்தளிப்பு
திராவிடியா என்ற சொல்லை அண்மையில் ஒரு நடிகை பயன்படுத்தி இருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு திமுக தரப்பில் அடுத்தடுத்து பதில் தரப்பட்டது. அதற்கும் அசராத அந்த வலதுசாரி நடிகை, திராவிடியா சொல்லை விடாமல் பிடித்து தொங்கினார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி, உங்களுக்கு வாய்க் கொழுப்பு ரொம்ப அதிகம்தான்! 2 ஆயிரம் ஆண்டுகால உயர்சாதி திமிர் என ஆவேசப்பட்டார்.

தொடரும் திராவிடர் இயக்கம் மீதான வசை
இத்தனைக்கும் பிறகும் திமுகவை விமர்சிக்க திராவிடியா என்ற சொல்லை மட்டுமே வலதுசாரிகள் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். தற்போது திமுக ராஜ்யசபா எம்.பி. எம்.எம்.அப்துல்லா இதற்கு பதிலடி தரும் வகையில் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அப்துல்லா எம்.பி.யின் இந்த பதிவு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

அப்துல்லா எம்.பி. ட்வீட்
எந்த சங்கியாவது திராவிடியானு சொன்னா பதிலுக்கு தேசிடியானு சொல்லுங்க. அவன் நல்ல அர்த்தத்தில் சொன்னா நம்ம சொல்றதும் நல்ல அர்த்த்தம் ஆகட்டும். அவன் கெட்ட அர்த்ததில் சொன்னா நம்ம சொல்றதும் கெட்ட அர்த்தம் ஆகட்டும் #தேசிடியா என்பதுதான் திமுக எம்.பி. அப்துல்லாவின் இந்த பதிவு. இப்பதிவை திமுகவினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் வழக்கம் போல வலதுசாரிகள் கச்சேரி கட்டி வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications