சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு பிரிவினைவாத செய்தித்தாள்.. கொதித்து ட்வீட் போட்ட தமிழச்சி எம்பி
சென்னை: ரயில்களில் பிரிவினையை ஊக்குவிக்கும் அனுமதி பெறாத செய்தித்தாள்களை விநியோகம் செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரிலிருந்து சென்னை புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில் பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட செய்தித்தாள் வழங்கப்பட்டது. அதில் ஆர்யவர்தா எக்ஸ்பிரஸ் என்ற செய்தித்தாளும் இருந்தது. இது பெங்களூரை தலைமையாக கொண்டு பிரசுரிக்கப்பட்ட நாளிதழாகும்.
இந்த பேப்பரின் பெயரை பார்த்த பயணிகளுக்கு பெயரே கேள்விப்படாத வகையில் இருக்கிறதே என்ற அதிர்ச்சி ஏற்பட்டது. சரி என்னதான் இருக்கிறது என பிரித்து பார்த்த போது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

பிரிவினைவாதம்
அந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில் "இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் படுகொலை செய்யப்படுவதை அங்கீகரிக்க வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பிரிவினைவாதத்தை உண்டு செய்யும் அளவுக்கு இந்த செய்தித்தாளில் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

முதற்பக்கத்தில் விஷம்
இதையடுத்து அந்த செய்தித்தாளின் முதற்பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்த பயணிகள் அதை இந்திய ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் அனுப்பி புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்யவர்தா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையை இதுவரை கேள்விப்படாத பட்சத்தில் இந்த பேப்பரை விநியோகிக்க ரயில்வே துறை அனுமதித்தது எப்படி என பயணிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சென்னை ரயில்வே மேனேஜருக்கு பறந்த புகார்
மேலும் சென்னையில் உள்ள மண்டல மேலாளருக்கும் புகாரானது கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மண்டல மேலாளர் அலுவலகம் பதிவிட்ட ட்வீட்டில், சதாப்தி எக்ஸ்பிரஸில் அனுமதி அளிக்கப்படாத இந்த நாளிதழ் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூர் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெங்களூர் அலுவலகம்
ஆனால் பெங்களூர் அலுவலகமோ இதுகுறித்து இந்திய ரயில்வே துறை அலுவலகத்திற்கே புகார் அனுப்பி, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் இது போன்றதொரு சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் ட்வீட் போட்டுள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன்
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனக்கு கிடைத்த தகவலின்படி பெங்களூர்- சென்னை சதாப்தி ரயிலில் டெக்கான் ஹெரால்டு மற்றும் உள்ளூர் செய்தித்தாள் ஆகிய இரண்டில் ஒன்றை பயணிகளின் விருப்பத்திற்கேற்ப விநியோகிக்கவே இந்திய ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது.

அனுமதிக்கப்படாத பேப்பர்
ஆனால் இவ்வாறு பிரிவினையை தூண்டும் விதமான, அனுமதிக்கப்படாத செய்தித்தாள்கள் ரயில்களில் விநியோகிக்கபடுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து சென்னை மண்டல ரயில்வே மேலாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ரயில்வே துறை
இந்த புகார் குறித்து இந்திய ரயில்வே துறை கூறுகையில், செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரை நாங்கள் எச்சரித்துள்ளோம். ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயணிகளுக்கு இலவசமாக டெக்கான் ஹெரால்டு மற்றும் கன்னட செய்தித்தாளை மட்டுமே விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரர் ஒப்பந்த நிபந்தனைகளின்படியே நடந்து கொள்ள வேண்டும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

பேப்பர் ஒப்பந்ததாரர் கருத்து
இதுகுறித்து ஒப்பந்ததாரர் பிகே ஷெஃபி கூறுகையில், ரயில்களில் விநியோகிக்க அனுமதி கொடுக்கப்பட்ட செய்தித்தாள்களில் ஒரு இலவச இணைப்பை வைத்து விநியோகிக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி நாங்களும் விநியோகித்தோம். ஆனால் நாங்கள் இணைத்த இலவச இணைப்பும் ட்விட்டரில் வந்ததும் வெவ்வேறானவை. அதாவது ட்விட்டரில் புகாருக்குள்ளான செய்தித்தாளை நாங்கள் இணைத்து கொடுக்கவில்லை. ரயிலில் பேப்பரை விநியோகம் செய்யும் ஊழியர்கள் அந்த பேப்பரில் என்ன இருக்கிறது என்று கூட படித்திருக்க மாட்டார்கள். எனவே இலவச இணைப்புகளையும் துண்டு பிரசுரங்களை இனி விநியோகம் செய்ய வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இனி டெக்கான் ஹெரால்டு மற்றும் கன்னட செய்தித்தாள்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்றார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு












Click it and Unblock the Notifications