"எதுக்கு மீன் குழம்பு பாத்திரத்தை கழுவணும்".. ரஜினியை பார்த்து பொளேரென கேட்ட ரவிக்குமார்!
ரஜினிகாந்த் பேச்சு குறித்து எம்பி ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "எதுக்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவ வேண்டும்? பேசாமல் அவர் ஒரு புது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. போயஸ் கார்டனுக்கு எல்லாரும் போய், நீங்கள்தான் தமிழ்நாட்டையே காப்பாத்தணும்னு சொல்ல வேண்டும் என ரஜினி நினைக்கிறார்... இது சரி கிடையாது" என்று எம்பி ரவிக்குமார் ரஜினி பேச்சு குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் இன்று காலை பேசும்போது, "முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னேன். அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்... ஏன் அப்படி சொன்னேன் என்றால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

ரஜினிகாந்த் இப்படி சொன்ன உதாரணம் பெரும் வைரலாகிவிட்டது.. பலரும் இதை பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. ரஜினியின் ரசிகர்கள் தரப்போ இதை பாராட்டி மகிழ்ந்து வருகிறது.
இந்நிலையில், ரஜினியின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எம்பி ரவிக்குமார் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:
"ரஜினியின் திட்டங்கள் அவர் தன் தொண்டர்கள் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என்கிறார்.. தொண்டர்கள்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் புதுசா ஒரு கருத்தை சொல்கிறார்... தங்கள் உயிரை கூட இழப்பதற்குத் தயாராக இருக்கும் தொண்டர்களை அவமானப்படுத்தும் கருத்தாக இது உள்ளது.
அவருடைய கருத்து அபத்தமானது.. ஆபத்தானது... மக்கள் குறித்து என்ன நினைக்கிறார் என்பதும் அவர் பேச்சில் தெரிகிறது... மக்களே நேரடியாக போயஸ் கார்டனுக்கு போய் நீங்கள்தான் தமிழ்நாட்டையே காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும் என ரஜினி நினைக்கிறார். இது சரி கிடையாது.
மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல தமிழக அரசியல் இருப்பதாகக் சொல்கிறார்... எதற்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவ வேண்டும்? அவர் ஒரு புதுப் பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. பாசிச மனநிலையில் ரஜினி பேசுகிறார்.. அடிப்படையில் அவர் நல்ல மனிதர்தான்.. ஆனால், அவருடைய கருத்துகள் ஆபத்தாக உள்ளது... மக்களுக்கு எதிரான கருத்துக்களாக உள்ளது... சுருக்கமாக அரசியல் கட்சி குறித்த புரிதல் அவருக்கு இல்லை" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications