"மெயின் ரோட்டில்"அராஜகம்.. திமுக தொண்டரை இழிவாக நடத்திய ஜெயக்குமார்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!
சென்னை : என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என ஜெயக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும், ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல என திமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தொண்டரை சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக வீடியோ வெளியானது.
இந்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் திருச்சியில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல என திமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- அராஜகமாகச் செயல்பட்டு- ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரி போல் நினைத்துக்கொண்டு - தி.மு.க. தொண்டரை இழிவாக நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமாரின் ஆணவச் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, "அ.தி.மு.க.வை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என அவர் வழக்கம்போல் அபாண்டமாகப் புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து - காது கொடுத்துக் கேட்கும் ஒரு முதலமைச்சரைத் தமிழ்நாடு பெற்றிருப்பதைத் திரு. ஜெயக்குமாரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. "நில அபகரிப்பு" "பொது வெளியில் அராஜகம்" "கொலை முயற்சி வழக்கு" உள்ளிட்ட புகார்களுக்குத் திரு. ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர- இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல. சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது.

எம்.எல்.ஏ. கூட இல்லை
திரு. ஜெயக்குமார் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அ.தி.மு.க.வை எச்சரிப்பதாக எப்படி அமையும்? "மொட்டைத் தலைக்கும்- முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்" இந்த வியூகத்தை ஏன் அவர் முன் எடுக்கிறார்? ஒருவேளை "சூப்பர் ஸ்போக்ஸ்பர்சனாக" இருந்த திரு. ஜெயக்குமாருக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவோ- இணை ஒருங்கிணைப்பாளராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்குமேயானால் அதை வைத்து அ.தி.மு.க.விற்குள் கச்சேரி நடத்திக் கொள்ளட்டும்.

தர்ம யுத்தம் நடத்தியவர்
"தர்ம யுத்தம்" நடத்தி விட்டு இணைந்தவர்- இணைத்தவர்களிடம் "தர்மம்" கேட்டுப் போராடட்டும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும்- கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும் புழுதி வாரி வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கள்ள ஓட்டுப் போடுவதைக் கலையாக வைத்து- முதன் முதலில் "சைதாப்பேட்டை" "கும்மிடிப்பூண்டி" கள்ள ஓட்டுப் பார்முலாவை தேர்தலில் புகுத்தி ஜனநாயக தேர்தலைச் சீர்குலைத்த அ.தி.மு.க. ஆட்சியின் இருண்ட காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் எத்தகையைக் கீழ்த்தரமான கள்ள ஓட்டுத் தந்திரத்தின் விளைவாக நடந்தது என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
Recommended Video

சட்டத்தின் ஆட்சி
ஆனால் நியாயமாக- நேர்மையாகத் தேர்தல் நடைபெற்று- இன்று உள்ளாட்சி அமைப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும்- கூட்டணிக் கட்சியினரும் அமர்ந்திருப்பதைச் சகித்துக் கொள்ள இயலாத திரு. ஜெயக்குமார் "தி.மு.க. அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு" என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திரு. ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளைக் கொடுத்தாலும்- அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் கழகத் தலைவர் காட்டிய பெருந்தன்மை. ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த திரு. ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- "மெயின் ரோட்டில்" அராஜகத்தில் ஈடுபடும் போது- சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர- தி.மு.க.வோ, எங்கள் கழகத் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது." என அந்த அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications