தமிழக துரோகி யார்?.. அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார்.. ஓபன் சேலஞ்ச் விடுத்த திமுக எம்பி
சென்னை: தமிழின துரோகி யார் என்பது குறித்து அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார் என திமுக எம்பி செந்தில் குமார் ஓபன் சேலஞ்ச் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் திமுக சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு பாமக துரோகம் செய்துவிட்டது என முக ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கு அன்புமணி ராமதாஸும் உரிய பதிலடியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
துரோகம் இழைத்த ராமதாஸ்
அவர் கூறுகையில் பா.ம.க தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு போராட்டங்கள், அரசியல் தளத்தில் பல்வேறு அழுத்தங்கள் கொடுத்துள்ளோம். ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு பா.ம.க துரோகம் இழைத்ததாகப் பேசியுள்ளார்.

குடியுரிமை
தமிழ்நாடு, டெல்லி, ஐ.நா வரையில் பா.ம.க அழுத்தம் கொடுத்துள்ளது. உண்மையில் தி.மு.க தான் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இலங்கைப் பிரச்னை தொடங்கிய 1983-ம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சியில் இருந்தது. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்துள்ளது. அப்போது ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வாங்கிக் கொடுக்கவில்லை' என்று பேசியிருந்தார்.

குடியுரிமை
தமிழ்நாடு, டெல்லி, ஐ.நா வரையில் பா.ம.க அழுத்தம் கொடுத்துள்ளது. உண்மையில் தி.மு.க தான் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. இலங்கைப் பிரச்னை தொடங்கிய 1983-ம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சியில் இருந்தது. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்துள்ளது. அப்போது ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வாங்கிக் கொடுக்கவில்லை' என்று பேசியிருந்தார்.

திமுக எம்பி சவால்
‘தமிழன துரோகிகள் யார்? என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் பதில் அளித்துள்ளார்.

திமுக எம்பி தயார்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் விவாதிக்க தயார். 😉
திரு
@draramadoss
நீங்கள் சொல்லும் இடத்தில்,
சொல்லும் தேதியில்,
சொல்லும் நேரத்தில்
உங்களுடன் விவாதிக்க தயார். #Open_Challenge.
Eagerly waiting for a healthy debate.
Bring it on.
(ஆரோக்கியமான விவாதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வாருங்கள் விவாதிக்கலாம்).

திமுக எம்பி
தருமபுரி எம்பியாக இருந்த அன்புமணியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் களமிறக்கப்பட்ட டாக்டர் செந்தில்குமார் டஃப் போட்டி கொடுத்தார். இவர்களது தொகுதி வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது. பின்னர் ஒரு வழியாக திமுக எம்பி செந்தில்குமார் வெற்றி பெற்றார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications