"ஒத்த ஓட்டு" சிங்கம்.. கர்நாடகாவில் 4 ஓட்டு! அண்ணாமலையின் முன்னேற்றம் -கலாய்த்த திமுக செந்தில்குமார்
சென்னை: அரவக்குறிச்சியில் வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே வென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த தொகுதியில் 4 வாக்குகளை பெற்று இருப்பதாக திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்து உள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கிறது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கும் சூழலில், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பலரும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவுக்காக அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் பாஜாவிற்கு வெறும் 10 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளதாக ஒரு செய்தியை பதிவிட்ட செந்தில் குமார், "இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "Correction:
ஒரு சிறு திருத்தம்: கர்நாடகாவில் நம்ம ஆளு பிரச்சாரம் செய்த தொகுதியில் 10 வாக்குகள் தான் விழுந்தன என்பது தவறு. 4 வாக்குகள் தான் விழுந்ததாம். So மீண்டும் இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் (Pun unintended)" என்று மீண்டும் அதே பழமொழியை பதிவிட்டார்.

இந்த நிலையில் இன்று அவர் இது குறித்து வெளியிட்டு உள்ள பதிவில், "நான் பதிவிட்ட பழமொழியை screenshot போட்டு சிங்கத்தை மேலும் அவமான படுத்தும் டியர் வார் ரூம் கத்துகுட்டிகளா! நான் பாராட்டி தான் சொன்னேன். அரவக்குறிச்சியில் பூத் 214ல் பதிவான 927 வாக்குகளில் ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம், கர்நாடகாவில் ஒதுக்கப்பட்ட பூத்தில் 4 வாக்கு வாங்கியது முன்னேற்றமே." என்று பதிவிட்டு உள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?












Click it and Unblock the Notifications