அண்ணாவின் சமூகநீதி..1.5 லட்சம் மாணவர்களுக்கு போதிக்கும் தமிழ்நாடு அரசு! திருச்சி சிவா சொன்ன பாயிண்ட்
சென்னை: இளைஞர்கள் சமூகத்தில் நடைபெறும் அவலங்களைக் களைய முனைப்பு காட்ட வேண்டும் எனவும் சக மனிதன் படும் துயரங்களைத் துடைக்க தம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும் எனவும் திமுக எம்பி திருச்சி சிவா மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை முதல்சுற்று நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையின் உதவியுடன் இந்நிகழ்ச்சியை நடத்தியது.

முதலமைச்சர் பேச்சு: இதன் 100-வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 24.04.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே பண்பாட்டு விழுமியங்கள், சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.
200 கல்லூரிகள்: அந்த அறிவிப்பிற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் இரண்டாம் சுற்று மாபெரும் தமிழ்க் கனவு' பரப்புரைத் திட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு. 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன.

திருச்சி சிவா பேச்சு: இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் 'இனியொரு விதி செய்வோம்! என்னும் பொருண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்கள் கருத்துகளை எடுத்துரைத்தார். இளைஞர்கள் சமூகத்தில் நடைபெறும் அவலங்களைக் களைய முனைப்பு காட்ட வேண்டும் எனவும் சக மனிதன் படும் துயரங்களைத் துடைக்க தம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழ் இணையக் கல்விக்கழக இணை இயக்குநர் திரு.ரெ.கோமகன் அவர்கள் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரேமா அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேற்கண்ட நிகழ்வில் ஏறத்தாழ 1100 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 'தமிழ்ப் பெருமிதம்' சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications