ஸ்டாலின் முன்பு திரண்ட திமுக எம்.பிக்கள்.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிளான் பற்றி ஆலோசனை!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 29) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications