Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ஜிக்கல் தேமுதிகவில் சத்தமாக ஒலித்த திமுக பெயர்.. பிரேமலதா டிக் அடிக்க போகும் கட்சி இதுதான்.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது 4 முனைகளாக பிரிந்துள்ளன. திராவிடக் கட்சிகள், தேசிய கட்சிகள், புதிய அரசியல் அணிகள் என வாக்குகள் பல திசைகளில் சிதறிக்கிடக்கின்றன... இதில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது? கடலூர் மாநாட்டில் ஏன் கூட்டணியை தேமுதிக அறிவிக்கவில்லை? பின்னணி காரணம் உள்ளதா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, தேமுதிக தொடர்ந்து தேர்தல் தோல்விகளையே சந்தித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாமல் இருந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்து வருகிறார்.

DMDK DMK Premalatha

தேமுதிக கூட்டணி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அப்போது ஒரு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று அதிமுக அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற மேல்சபை எம்.பி. தேர்தலில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுக சார்பில் 2 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்ட நிலையில், தேமுதிக புறக்கணிக்கப்பட்டதாக அந்தக் கட்சி தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதனால் தேமுதிகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சர்ஜிக்கல் திமுக

"ஒவ்வொரு தேர்தலிலும் எங்களது ஆதரவை பயன்படுத்திக் கொண்டு, பின்னர் ஏமாற்றிவிடுகிறார்கள்" என்பதே தேமுக நிர்வாகிகளின் மனநிலையாக உள்ளது... அதனால்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் எளிதாக இணைந்து விடக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேல்சபை எம்பி பதவி மற்றும் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே கட்சியின் நிபந்தனையாக மாறியுள்ளது.

சமீபத்தில் தேமுதிக கட்சி ஆபிசில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. கூட்டணியை ஆதரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மாவட்ட செயலாளர்களிடம் துண்டு சீட்டு கொடுத்து கருத்து கேட்டதில், தேமுதிக மாவட்ட செயலாளர்களில் 60% திமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் 40% அதிமுக கூட்டணிக்கு போகலாம் என்றும் கருத்து சொன்னார்களாம்..

அதிமுக எம்பி பதவி

அதே நேரத்தில், அதிமுக கூட்டணியை முறிக்க வேண்டாம் என்று சொல்பவர்களும் கட்சிக்குள் இருக்கத்தான் செய்கிறார்களாம்.. அதற்கேற்றவாறு, தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம், திமுக தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தே.மு.தி.க. எந்த அணியில் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளது. ஆனால் நடிகர் விஜயின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனராம்..

நடிகர் விஜயின் அரசியல் வருகையால் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்ற சூழலில், தேமுதிக எடுக்கும் முடிவு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. விஜயுடன் கைகோர்க்குமா, அல்லது பெரிய திராவிட அணிகளில் ஒன்றைத் தேர்வு செய்யுமா என்ற கேள்விக்கு, தை மாதம் பிறந்த பிறகு பிரேமலதா அறிவிக்கும் முடிவே பதிலாக அமையப்போகிறது.

6 சதவீத வாக்கு வங்கி

இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது... 2021 தேர்தல் தேமுதிகவுக்கு கடும் பின்னடைவை தந்தது. 60 தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. வாக்கு வங்கி 0.43 சதவீதமாக மட்டுமே சுருங்கியது. அரசியல் ரீதியாக இது பெரிய சரிவாக இருந்தாலும், ஒரு முக்கிய விஷயம் இன்னும் தேமுதிகவுக்கு சாதகமாகவே உள்ளது,.. ஆம், அந்தக் கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தில் இன்னும் தொடர்கிறது.

பாமக, மதிமுக போன்ற கள அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சிகளே இன்று அங்கீகாரத்தை இழந்து நிற்கும் சூழலில், தேமுதிக அந்த நிலைக்கு தள்ளப்படவில்லை.. இது 2026 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவுக்கு வெற்றி-தோல்வியை விட முக்கியமான இன்னொரு போராட்டமாக மாறியுள்ளது. அது, கட்சியின் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதுதான்.

டிக் அடிக்க போகும் பிரேமலதா

அங்கீகாரத்தை இழக்காமல் இருக்க, சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெறுவதோடு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதுவும் சாத்தியமாகவில்லை என்றால், குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இலக்குகளை அடைவதே பிரேமலதாவுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவாலாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தனித்து போட்டியிடுவது நடைமுறையில் பலன் தர வாய்ப்பில்லை என்பதால், வாக்கு வங்கி வலுவாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து, வெற்றி பெறக்கூடிய தொகுதிகளைத் தேர்வு செய்வதே தேமுதிக முன் உள்ள ஒரே ஆப்ஷன்... அந்த ஆப்ஷன் எது?????? பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+