Exit Poll Results: எல்லை கோட்டை ஈஸியாக தொடும் திமுக..எடப்பாடிக்கு மீண்டும் ஷாக்! குறுக்கே விஜய்! P-Marq கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் Republic TVயின் P-Marq நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது. திமுக 125 முதல் 145 தொகுதிகள் வரையும், அதிமுக 65 முதல் 85 தொகுதிகள் வரையும், தமிழக வெற்றிக் கழகம் 16 முதல் 26 தொகுதிகள் வரையும், பிற கட்சிகள் ஒன்று முதல் ஆறு தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனக் கூறியுள்ளது, தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் திமுக கூட்டணியை மீண்டும் ஆட்சி அமைக்கும் என Republic TVயின் P-Marq நடத்திய கருத்துக்கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் Republic TV சார்பில் P‑Marq நிறுவனம் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்ப வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் படி, திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 16 முதல் 26 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும், பிற கட்சிகள் சேர்த்து 1 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியமாகும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்கள் வரை பெறும் என கூறப்படுவது, மீண்டும் அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகலாம் என்பதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
