கத்தி பேசுவது அரசியல் இல்லைன்னு சொன்ன அதே மேடையில் கத்திய விஜய்- திமுக நெட்டிசன்கள் "டிகோட்"
சென்னை: கத்தி பேசுவது அரசியல் இல்லைனு சொன்ன அதே மேடையில் நடிகர் விஜய் கத்தி பேசியது குறித்து திமுக நெட்டிசன்கள் நோட் செய்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது. அப்போது விஜய் மாலை 4 மணிக்கு மாநாட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் தொண்டர்களும் ரசிகர்களும் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து அந்த மாநாட்டில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த 800 மீட்டர் ரேம்பில் விஜய் நடந்து வந்து தொண்டர்களையும் ரசிகர்களையும் பார்த்து கையசைத்தார். அப்போது அவர் மீது கட்சிக் கொடி நிறத்தினாலான துண்டுகள் தூக்கி வீசப்பட்டன.
அதை கேட்ச் பிடித்த விஜய் கழுத்தில் சுற்றிக் கொண்டார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழி போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பிறகு அவருடைய கட்சி நிர்வாகிகள் பேசினர். கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
பிறகு தனது கட்சி மாநாட்டு மேடையில் முதல் முறையாக பேசுவதற்கு முன்னர் தாய், தந்தையரிடம் ஆசி பெற்றார். இதையடுத்து விஜய் பேசுகையில் மற்ற கட்சிகளில் கட்சி நிர்வாகிகளின் பதவி, பெயரை சொல்லி அவர்களே என கூறி வணக்கம் சொல்வர், அதை அவர் கிண்டல் செய்தார். அதாவது, "என்னாது இது அவர்களே இவர்களே, நீ, நான்... இனி அதெல்லாம் கிடையாது, நாம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
பிறகு நமது அரசியலில் யாரையும் அட்டாக் செய்யக் கூடாது என கூறிய அவர் அதற்காக கண்களை மூடிக் கொண்டு இருக்க போவதில்லை என்றார். ஒரு கட்டத்தில் அவர் பேசுகையில், அரசியல்ன்னா கோபமா கொந்தளிப்பவர்தான் ஏதோ புரட்சி செய்ய வந்தவங்க என்ற கான்செப்ட் முன்பெல்லாம் இருந்தது.
அதெல்லாம் நமக்கு எதுக்குங்க, அது நமக்கு செட்டும் ஆகாதுங்க! அதனால இந்த ஆ, ஊ, ஆச்சா போச்சானு கத்துறத விட்டுட்டு கோபமா கொந்தளிக்கிறத விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட வேண்டும் என கூறினார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து , நாம் எல்லாருமே ஒன்னுதான், நாம் எல்லாருமே சமம்தான். அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்கள் எல்லாருக்கும் என்னோட உயிர் வணக்கங்கள் என கொந்தளிப்புடன் பேசினார்.
இதை திமுகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். கோபமாக கொந்தளிக்கக் கூடாதுனு சொல்லிட்டு இப்போ விஜய்யே கொந்தளிக்கிறார்னு சமூகவலைதளங்களில் வீடியோவுடன் கலாய்த்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications