விஜய்க்கு ரூ.500 கோடி கொடுத்து.. கூட்டணிக்கு இழுக்க முயலும் திமுக! அதிமுக கேசி கருப்பணன் பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது. அனைத்து அரசியல் கட்களும் இப்போதே தேர்தலை மனதில் வைத்து வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தங்கள் கூட்டணிக்குள் வர விஜய்க்கு 500 கோடி ரூபாயைக் கொடுக்க திமுக முன்வந்ததாகவும் பணம் வாங்கினால் விஜய் அரசியலே முடிந்துவிடும் என்றும் அதிமுக மாஜி அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இப்போதே தேர்தல் களம் மெல்லச் சூடுபிடித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அரசியலை மனதில் வைத்தே நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மக்களைச் சந்திக்கும் பணிகளையும் கூட அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.

DMK offered Rs 500 crore for Vijay to have alliance with DMK says ADMK Ex minister karuppannan

கேசி கருப்பண்ணன்

இதற்கிடையே திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாஜி அமைச்சர் கேசி கருப்பண்ணன், திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக முயன்றதாகவும் இதற்காக திமுக ரூ.500 கோடியை கூட கொடுக்க முன்வந்ததாகவும் பேசியுள்ளார். பணம் வாங்கினால் விஜய்யின் அரசியலே முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.

ரூ.500 கோடி

திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் கருப்பண்ணன் மேலும் பேசுகையில், "விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளது. விஜய்க்கு 500 கோடி கொடுப்பதாக திமுக கூறியிருக்கிறது. தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ரூ.500 கோடி தருவதாக திமுக சொல்லியுள்ளது. ஆனால், அவர் வாங்க மாட்டார். ஏனென்றால் அவருக்குத் தெரியும். ஒரு முறை பணம் வாங்கிவிட்டால் அரசியல் முடிந்துவிடும். பணம் வாங்க ஆரம்பித்தால் அரசியல் முடிந்துவிடும்.

இப்படி தான் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க ரெடியாக உள்ளனர். ரூ.1000, ரூ.2000 பணம் கொடுப்பார்கள். இதெல்லாம் ஒரு வாரச் செலவுக்குக் கூட பத்தாது. ஒரு குடும்பத்திற்கு சர்வ சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை செலவாகிறது. எனவே, தேர்தலுக்குப் பணம் கொடுக்க முற்பட்டால் அதை மக்கள் வாங்கக்கூடாது" என்றார். மேலும், அவர் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் அதிமுக எப்படி வென்றது என்பது குறித்தும் பேசியிருந்தார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தான் தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாகத் தமிழகத்தில் ஆறு மாதங்கள் இருக்கும்போது தான் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கும். ஆனால், இந்தாண்டு ஓராண்டு இருக்கும்போதே தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துவிட்டன. இப்போது எல்லா கட்சிகளுமே தேர்தலை மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருகின்றன.

ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியை அப்படியே பராமரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் வென்று வருவதால் திமுக கூட்டணியில் பெரிதாக எந்தவொரு சலசலப்பும் இல்லாமல் இருக்கிறது. மறுபுறம் அதிமுக ஏற்கனவே பாஜக உடன் தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. தேர்தல் நெருங்கும்போது வேறு பல கட்சிகளையும் கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியை இவ்விரு கட்சிகளும் நிச்சயம் எடுக்கும்.

நான்கு முனை போட்டி

இது தவிர விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. தவெக தலைமையில் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் விஜய் கட்சி ஈடுபட்டுள்ளது. இது போக நாம் தமிழர் கட்சி எல்லா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது. இதுபோல தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+