4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்!
சென்னை: திமுக சார்பாக 4 மாநகராட்சி மேயர்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி மேயராக உள்ள ராமநாதன் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராகவும், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும், ஒசூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சத்யா ஒசூர் தொகுதி வேட்பாளராகவும், கன்னியாகுமரி மாநகராட்சி மேயராக இருக்கும் மகேஷ் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் நேரடியாக 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியில் உதயசூரியன் சின்னத்தில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சுமார் 80% படித்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேர் பெண்கள்.

மொத்தமாக 125 பட்டதாரிகள்.. அதில் 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், சட்டம் படித்தவர்கள் 29 பேர், மருத்துவர்கள் 15 பேர். அதேபோல் 4 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 மாநகராட்சி மேயர்களுக்கும் சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி மேயராக உள்ள ராமநாதன் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் கன்னியாகுமரி மாநகராட்சி மேயராக இருக்கும் மகேஷ் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும், ஒசூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சத்யா ஒசூர் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4 மேயர்களுக்கு சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கி இருப்பது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சட்டசபைத் தேர்தலுக்கு பின் புதிய மேயர்களும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மாநகராட்சி மேயராக பல்வேறு பணிகளை மேற்கொண்டதோடு, மக்களிடையே செல்வாக்கு இருப்பவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications