ஸ்டாலின் எடுத்த முடிவு.. "தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வேண்டாம்!" காங்கிரஸுக்கு எகிறும் பிரஷர்
சென்னை: விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கூட்டணி குறித்துப் பேசுவது தொடர்ச்சியாகச் சலசலப்பை உண்டாக்கி வருகிறது. இதற்கிடையே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டாம் என திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சீக்கிரமே தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் நிலையில், திடீரென திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் இடையிலான நல்லுறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள்
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள், திமுக மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இதற்குக் காரணம். இந்த விவகாரத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எடுத்த முடிவு
சம்பந்தப்பட்ட இரு காங்கிரஸ் நிர்வாகிகள் மீதும் டெல்லி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதி இல்லாமல் மாணிக்கம் தாகூர் மீண்டும் மீண்டும் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் போது எப்படித் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதே திமுகவின் கேள்வியாக இருக்கிறது.
சர்ச்சை கருத்து
கடந்த பிப்ரவரி 15ம் தேதி நடந்த காங்கிரஸ் மதுரை தெற்கு மாவட்டக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார். 2014ஆம் ஆண்டில் திமுக செய்த தவறுகளின் சுமையைக் காங்கிரஸ் சுமந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக் காங்கிரஸ் கட்சிக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்று கூறிய மதுரை மாவட்டச் செயலாளர் மீது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார். மேலும், இதே கூட்டத்தில் தான் அதிகாரப் பகிர்வைக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கச் சில காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்தல் நெருங்கும்போது காங்கிரஸ் கூட்டணியை மாற்றுமோ என திமுக தலைமை சந்தேகிக்கிறது. இது கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்டாலின் அப்சட்
தேர்தல் நெருங்கும் சூழவில், காங்கிரஸ் நிர்வாகிகளின் இதுபோன்ற பேச்சுகளால் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை வேண்டாம் என ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இது கூட்டணிக்குள் நிலவும் தீவிரமான இறுக்கமான சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது.
டெல்லி தலைமை ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தலைவர்களால் இதுபோல பேச முடியாது என்பதே காங்கிரஸ் நிர்வாகிகளே சிலரே ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், இதற்காகக் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை எல்லாம் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் ஓராண்டிற்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டும். இப்போது வெளியேறுவது அதிமுக- பாஜகவுக்குச் சாதகமான அமையும் என்பதால் தேசியத் தலைமை அந்த முடிவை எடுக்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications