கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட்
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது 'உரிமைத் தொகை' யுத்தமாக மாறியிருக்கிறது. "யார் கொடுத்தாலும் காசு நமக்குத்தானே!" என மகளிர் தரப்பிலும் இப்போதே அனல் பறக்கின்றன விவாதங்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் எப்படியும் இருக்கட்டும், ஆனால் ஒன்று மட்டும் உறுதி-தமிழகப் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒரு 'மெசேஜ்' வரப்போகிறது. அது 2000 ரூபாயாக இருக்குமா அல்லது 2500-ஆக இருக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

திமுக: 'உரிமை' உயருமா?
ஆளுங்கட்சியான திமுக, ஏற்கெனவே தந்து கொண்டிருக்கும் 1000 ரூபாயை வைத்துத் தான் தேர்தலைச் சந்திக்கிறது. 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை ஒரு மாபெரும் சாதனையாக முன்வைக்கும் ஸ்டாலின், "மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்" என அதிரடி காட்டுகிறார். "நாங்க சொன்னதைச் செய்வோம்" என்பதுதான் அறிவாலயத்தின் தாரக மந்திரம்.
இதற்கான லிஸ்ட் எல்லாம் ஏற்கனவே ரெடி. கூடுதலாக சில பயனாளிகளை சேர்த்துவிட்டால் போதும்.. ஜூன் இல்லை ஜூலையில் கண்டிப்பாக பணம் பெண்கள் கணக்கிற்கு வந்துவிடும்.
அதிமுக: 'குலவிளக்கு' ஏற்றி வைக்குமா?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ ஒருபடி மேலே போய், "நாங்க வந்தா 1000 எல்லாம் கிடையாது, நேராக 2000 ரூபாய் தான்!" என 'குலவிளக்குத் திட்டத்தை' அறிவித்து கோதாவில் குதித்துள்ளார். கூடவே ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என 'எக்ஸ்ட்ரா' அப்பளம் வைத்து அசத்துகிறது இலை தரப்பு.
'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
TVK: தவெக-வின் 'விஜய்' கணக்கு!
இந்த இரண்டு திராவிட ஜாம்பவான்களையும் ஓரம் தள்ளிவிட்டு, நடிகர் விஜய் (தவெக) தனது மகளிர் தின விழாவில் ஒரு மெகா குண்டை வீசினார். "உரிமைத் தொகையாவது, குலவிளக்காவது... எங்க ஆட்சி வந்தா மாசம் 2500 ரூபாய்!" என்பதுதான் விஜயின் 'மதிப்புமிகு மகளிர் திட்ட' வாக்குறுதி. இதைக் கேட்டவுடன் மற்ற கட்சிகளுக்குச் சற்று நடுக்கம் வந்திருப்பது என்னவோ உண்மைதான். விஜய் ஒருவேளை மெஜாரிட்டி பெற்றால் ரூ.2000க்கு பதில் பெண்கள் 2500 பெறுவார்கள்.
கள நிலவரம் என்ன?
அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, இந்தத் தேர்தல் 'பெண்களின் வாக்குகளை' யார் அதிகம் கவர்கிறார்களோ அவர்களுக்கே கோட்டை எனத் தெரிகிறது.
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய இறுதிப் பட்டியலின்படி:
மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380 (5.67 கோடி)
பெண் வாக்காளர்கள்: 2,89,60,838
ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925
மூன்றாம் பாலினத்தவர்: 7,617
இதனால் இந்தத் தேர்தல் 'பெண்களின் வாக்குகளை' யார் அதிகம் கவர்கிறார்களோ அவர்களுக்கே கோட்டை எனத் தெரிகிறது.
திமுக: செய்துகொண்டிருக்கும் திட்டத்தின் தொடர்ச்சி.
அதிமுக: மாற்றத்திற்கான புதிய வாக்குறுதி.
தவெக: இளைஞர்கள் மற்றும் பெண்களைக் கவர 'பம்பர்' பரிசு போன்ற 2500 ரூபாய் அறிவிப்பு.
யார் ஜெயித்தாலும் சரி, தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றதும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழகப் பெண்களுக்குக் குறைந்தபட்சம் 2000 ரூபாய் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. 'காசு தருவாங்க சரி, ஆனா இதனால விலைவாசி உயராம இருந்தா சரி' என பெட்டிக்கடை ஓரத்தில் ஒரு பெருசு அலுத்துக் கொள்வதும் நம் காதில் விழாமல் இல்லை!












Click it and Unblock the Notifications