வலையில் மாட்டிய 3 "திமிங்கலங்கள்".. அதிமுகவை அல்லோகலப்படுத்த போகும் ஸ்டாலின்.. அப்படி என்ன கோபம்?
எல்லாம் போக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்.
சென்னை: அதிமுகவை அல்லோகலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய திட்டம் ஒன்று ஆளும் திமுக வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தாலும் இன்னும் தேர்தல் ஆணையம் பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் தேர்தல் ஆணையம் கையிலேயே இறுதி முடிவு உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் இதில் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

தேர்தல் ஆணையம்
இப்போது உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடந்தது செல்லும் என்று அறிவித்து உள்ளது. அதை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது. இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. இதனால் அதிமுகவில் இன்னும் நிலையற்ற தன்மையே நிலவுகிறது.

அதிருப்தி
இன்னொரு பக்கம் எடப்பாடி மீது சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். அவர் ஓ பன்னீர்செல்வமும் சமாதானமாகி சென்றால் பிரச்சனை இருக்காது. மாறாக தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் அதிமுகவிற்குத்தான் சிக்கல். அவர் வந்த பின் 8 தேர்தல்கள் நடந்து உள்ளன. எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை. எடப்பாடி கொஞ்சம் விட்டுக்கொடுத்த போகலாம். மாறாக அவர் தன்னை தனி ஆளுமையாக காட்டிக்கொண்டு அதிமுகவின் சரிவிற்கு காரணமாக இருக்கிறார். இவருடன் இருந்தால் நமக்குத்தான் சிக்கல் சில எம்எல்ஏக்கள் நினைக்கிறார்களாம்.

எம்பிக்கள்
முக்கியமாக இவருடன் இருந்தால் 2026ல் எம்எல்ஏ ஆக முடியாது என்று சிலர் நினைக்கிறார்களாம். மேலும் ஜெயலலிதா இருந்த போது எம்பியாக இருந்த சிலரும் கூட எடப்பாடிக்கு கீழ் இருந்தால் 2026ல் எம்பியாக முடியாது என்று நினைக்கிறார்கள். திமுகவில் போய் சீட்டு வாங்கிவிட்டால் எப்படியும் எம்பி ஆகிவிடலாம் அல்லது 2026ல் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதோடு அதிமுக தேவையில்லாமல் பாஜகவை பகைத்துக்கொள்கிறது. எடப்பாடியுடன் இருந்து ஆளும் கட்சி சப்போர்ட்டும் இல்லாமல் பாஜகவை எதிர்ப்பது சரியாக இருக்காது. நாம் ஆளும் கட்சி பக்கமே போய் விடுவோம் என்று சில எம்எல்ஏக்கள் நினைக்கிறார்களாம்.

நல்ல வாழ்க்கை
எல்லாம் போக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். திமுகவில் அவர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அப்படி நாமும் திமுக சென்றால் மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறார்களாம். இதனால் கொங்கு மண்டலத்தில் 2 எம்எல்ஏக்கள் மத்திய மண்டலத்தில் ஒரு எம்பி ஆகியோர் எடப்பாடி அணியில் இருந்து திமுகவிற்கு தாவி விடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுகவே இதற்கான முன்னெடுப்பையும் எடுத்து வருகிறதாம். திமுகவின் இந்த செயலுக்கு பின் வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம்.. சமீப நாட்களாக முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி குடும்ப ரீதியாக தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்.. அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் கோபத்துடன் இந்த மூவை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications