19 நாளில் தமிழகம் முழுவதும்.. 16,000 கிராம சபை கூட்டங்கள்.. திமுக அதிரடி வியூகம்
சென்னை: டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16000 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. ஒவ்வொரு கிராமம் வாரியாக பிரச்சனைகளை எழுப்பி அதிமுகவை திக்குமுக்காட வைக்க இத்தகைய திட்டத்தை திமுக முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவலாயத்தில் நடந்து வருகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கிராம சபை கூட்டங்கள்
இந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16000 கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டிசம்பர் 23ம் தேதி முதல் முக ஸ்டாலின் நேரடியாக பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

நமக்கு நாமே
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மக்களை சந்தித்த முக ஸ்டாலின் இந்த முறை கிராம சபை கூட்டங்களை மூலம் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதிமுகவுக்கு நெருக்கடி
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கிவிட்டார். இன்று முதல் தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளார். இந்த சூழலில், இன்று திமுக மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ள ஸ்டாலின், கிராம சபை கூட்டங்கள் மூலம் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதிரடி முயற்சி
கிராமங்களில் மக்களிடையே உள்ள பிரச்சனைகளை கூர்ந்து கேட்டு அதற்கு தகுந்தாற் போல் தேர்தல் அறிக்கை தயாரிக்க மற்றும் பிரச்சனைகளை எழுப்ப மற்றும் மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொள்ள கிராம சபை கூட்டங்கள் உதவியாக இருக்கும் என்பதால் ஸ்டாலின் இத்தகைய திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.,

அதிரடி அரசியல்
கிராம சபை கூட்டங்கள் ஒருபக்கம் நடக்கும் அதேநேரம் ஸ்டாலினும் பிரச்சாரத்தில் களம் இறங்குவதால், திமுக சட்டசபை தேர்தலில் அதிரடியை துவங்கும் என தெரிகிறது. இனி தினசரி எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடும். அத்துடன் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications