‛‛ஆளுநரே அடங்கியிரு.. ராஜினமா செய்திடு’’.. ஆர்என் ரவிக்கு எதிராக சென்னையில் திமுக பரபர போஸ்டர்..
சென்னை: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள் திமுக போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த மசோதாக்கள் சட்டங்களாக மாறும். இந்நிலையில் தான் தற்பாது தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார்.

இவர் தமிழக அரசு சார்பில் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் வைப்பதாக ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து புகார் கூறப்படுகின்றன.
இந்நிலையில் தான் சமீபத்தில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பினார். இந்த மசோக்களை மீண்டும் நிறைவேற்ற நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதன்பிறகு 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைமுன்வைத்தனர். இந்த விவாதம் முடிந்த நிலையில் 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, சென்னை திருத்த சட்ட முடிவு உள்ளிட்ட மசோதாக்கள் அடங்கும்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் 2ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ் பல்கலைக்கழக 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு உள்பட மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேறியது. இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆளுநரை பொறுத்தமட்டில் மசோதாவை ஒரு முறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும். தற்போது 2வது முறையாக அந்த மசோதா அரசு தரப்பில் இருந்து நிறைவேற்றப்பட்டு வந்தால் அதற்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்க வேண்டும். அந்த வகையில் ஆளுநர் ஆர்என் ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் இரவோடு, இரவாக ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக திமுக நிர்வாகியின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‛‛ஹலோ மிஸ்டர் கவர்னர்.. அடங்கிடு! அடங்கியிரு! மக்களாட்சி தத்துவத்துக்கு. அடங்கிடு! அடங்கியிரு.. SIGN ALL OUR BILLS AND RESIGN YOUR POST'' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசுவின் பெயர் இடம்பெற்றுள்ளதோடு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் போட்டோ உள்பட சில நிர்வாகிகளின் போட்டோக்கள் உள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications