சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்... மு.க. ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.. பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட்.. நாராயணசாமி! - வீடியோ

    சென்னை: இருட்டறையில் கருப்பு பூனையை தேடும் வீண் முயற்சியை போல் பட்ஜெட் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    பொருளாதார தேக்கநிலை, வேலைவாய்ப்பின்மை, நலிவடையும் கிராமப்புற வளர்ச்சி பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    திசையில்லை

    திசையில்லை

    மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை! "ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி" தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பெருக்கிடவும், வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்படாமல் தடுத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்- எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லை. "விவசாயிகளின் சூரிய ஒளி மின்சக்தி மோட்டார்" என்று கூறி அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைத் துண்டிக்க, மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது.

    சீர்குலைப்பு

    சீர்குலைப்பு

    கல்விக்கு நிதியைக் குறைத்து- மாணவர்கள்- குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தும் வகையிலும், சமூக நீதிக் கொள்கையின் கட்டுமானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. வேகமாக நகர்மயமாகி வரும் இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு, உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவில்லை. தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    நிவாரணம் இல்லை

    நிவாரணம் இல்லை

    "மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயம்" "எல்.ஐ.சி தனியார் மயம்" போன்றவை - இந்த அரசுக்கு தொலை நோக்கு பார்வையும் இல்லை; தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வேறு வழியும் தெரியவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. "சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால்" பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்களை மீட்கவும், வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெறவும் எந்த நிவாரணமும் இல்லை, அதற்குப் பதிலாக, "ஜி.எஸ்.டி சட்டத்தால் சாதனை நிகழ்ந்து விட்டதாக" திசை திருப்பியிருக்கிறார் நிதியமைச்சர்.

    பயனில்லை

    பயனில்லை

    நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தை "சரஸ்வதி சிந்து நாகரீகம்" என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரீகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் சிறிதும் பொறுத்துக் கொள்ளாது.
    தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத- பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை.

    நடுத்தெருவில்

    நடுத்தெருவில்

    வேலை வாய்ப்பாற்ற இளைஞர்கள், சிறு குறு தொழில் செய்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்கும் ஏமாற்றம் அளித்து விரக்தியை ஏற்படுத்தும் நிதி நிலை அறிக்கை!! நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக இருக்கிறது! இந்தியாவுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக இல்லாமல் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது!

    கருப்பு பூனை

    கருப்பு பூனை

    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் வீண் முயற்சியாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. ஏற்கனவே " மதச்சார்பின்மை" ( secular) என்ற கருத்தாக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய பாஜக அரசு, இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் "சோஷலிசம்" ( socialist) என்ற கருத்தாக்கத்திற்கும் ஆபத்தை நிச்சயப் படுத்தியிருக்கிறது.

    English summary
    Central government's debt has come down to 48.7 percent in March 2019 from 52.2 percent in March 2014. Central government's debt has come down to 48.7 percent in March 2019 from 52.2 percent in March 2014. Fiscal deficit revised from 3.3% to 3.8% of GDP. FDI (Foreign Direct Investment) of $284 billion received in 2014-2019. Divestment target set at Rs 2.1 lakh crore for 2020-21.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X