தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சி... மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியில்லை, பாஜக ஆட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

    அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்து, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைத்தார்.

    அதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முறையாக தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்காததால் நூலிழையில் ஆட்சிப்பொறுப்பேற்கும் வாய்ப்பை தவறவிட்டோம் எனவும் தெரிவித்தார். ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவிற்கு வெற்றி செய்தி வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    வேண்டுகோள்

    ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா இல்லை சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா என்ற ஐயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், கும்பல் வன்முறையை தடுக்கக்கோரி கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஏற்கமுடியாது எனவும் ஸ்டாலின் பேசினார். மேலும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    தமிழகத்தை பொறுத்தவரை எதற்கும் உதவாத அரசு உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சினிமா படத்தில் இடம்பெற்ற, வரும்..ஆனா வராது என்ற வசனம் தான் தமக்கு நினைவுக்கு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியில்லை, பாஜக ஆட்சி எனக் கூறினார்.

    வீரவாள் பரிசு

    வீரவாள் பரிசு

    பரணியை நம்பினால் தரணியை ஆளலாம் போல் என ஸ்டாலின் பேசிய போது கூட்டத்திலிருந்து விசில் சத்தம் காதை கிழித்தது. இதையடுத்து தனது பேச்சை இரண்டு நிமிடம் நிறுத்திய அவர், பரணி திமுகவை நம்பி வந்துள்ளார் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். இதனிடையே ஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார் பரணி கார்த்திகேயன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+