பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள்... நாம் வாழ; மருத்துவர்கள் நலம் வாழட்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மருத்துவர் தினம் என்பதால் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மருத்துவர்கள் தினம்
தன்னுயிரைப் பற்றி மட்டுமே கவலைப்படும் பெரும்பான்மை மனிதர்களுக்கிடையே, பிறர் உயிர் வாழ்தலைப் பற்றியும் கவலைகொள்பவர்கள் மருத்துவர்கள். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை! அப்படி வாழ்ந்த பி.சி.ராய் எனப்படும் மருத்துவரின் பிறந்தநாளில் மருத்துவர்கள் தினம் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது.

பி.சி.ராய் பிறந்தநாள்
மருத்துவராக மட்டுமல்ல; மக்கள் தலைவராகவும் இருந்தவர் அவர். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர். முதலமைச்சராக இருந்தபோதும் தினமும் இலவச மருத்துவம் செய்தவர். தனது வீட்டையே மருத்துவமனைக்காகக் கொடுத்தவர். வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்து பலகாலம் ஆனபிறகும் பி.சி.ராய் நினைக்கப்படக் காரணம் அவரது பொதுநலம்; இந்த நாட்டு மக்கள் மீது வைத்த அன்புக்குணம்.

கருணை
பொதுநலனும், கருணை உணர்வும் மிக்க மனிதசேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை இன்று உலகம் உணர்ந்துவிட்டது. இன்று உலகமே மருத்துவர்களை மட்டும்தான் நம்பி இருக்கிறது. கொரோனா என்ற நோய்த்தொற்று பரவி மனித சமுதாயத்தை மிரள வைத்துள்ள நிலையில் அதற்கு அஞ்சாமல் போராடுபவர்கள் மருத்துவர்கள். இந்தப் பூமிப்பந்தைத் தனது சேவை உள்ளத்தால் உயிர்ப்பித்துக் கொண்டு இருப்பவர்கள் மருத்துவர்கள்.

நாடு வாழ நாம் வாழ
ஒவ்வொரு மனிதனின் உயிருக்குப் பின்னே, உடல்நலத்துக்குப் பின்னே, மகிழ்ச்சிக்குப் பின்னே இருப்பவர்கள் மருத்துவர்கள் தான்.நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்! மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சுக்கு இனிய நல்வாழ்த்துகள்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications