35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி!
சென்னை: உயர்கல்வி பயிலும் மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டசபை தேர்தலையொட்டி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, உயர்கல்வி பயிலும் மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டம் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் செயல்படுத்தப்பட்டது.
திமுக 2021 சட்டசபை தேர்தலின்போது, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. பின்னர், டேப்லட் அல்லது லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுக அரசு கடந்த பட்ஜெட்டின்போது, 2 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தலிலும் இளைஞர்கள், மாணவர்களைக் கவரும் வகையில், உயர்கல்வி படிக்கும் 35 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு











Click it and Unblock the Notifications