Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்" ஆளுநர் ரவியை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவுத்துள்ளது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

dmk tamil thai vazhthu


ஆனால் சட்டசபை தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கவில்லை என குற்றம்சாட்டிய ஆளுநர் ரவி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். இதனால் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.

இதற்கு முதல்வர் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் திமுக முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் "மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத ஆளுநர் ரவியை உடனடியாக ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். "ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு" என நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். கள்ளக்கூட்டணி சேர்ந்து ஆளுநரைக் காப்பாற்றி, தமிழ்நாட்டைச் சிறுமைப்படுத்த முயலும் அதிமுக- பாஜகவை அம்பலப்படுத்துவோம்! திராவிடச் சுவரை தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது. ஆரியமும் நுழையவிட மாட்டோம்! இது மாநில உரிமைக்கான போர். இதில் வெற்றி பெறுவோம்." எனக் காட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:"பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு.

ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. 'அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவையில் இருந்து வெளியேறினார்.

2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி. தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

சில மாதங்கள் முன்பு பிரசார் பாரதியின் இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பங்கேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது. இப்போது தேசிய கீதம் முதலில் பாடவில்லை என சொல்லி மறைமுகமாக தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் எதிர்த்திருக்கிறார். இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+