நேற்று அல்வா.. இன்று முட்டை.. சென்னையில் பாஜகவுக்கு எதிராக முளைத்த பேனர்கள்.. அட்டாக் மோடில் திமுக!
சென்னை: மத்திய பாஜக அரசை விமர்சித்து 'முட்டை' மற்றும் வடிவேலு படத்துடன் சென்னையின் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக மக்கள் நீதி மய்யம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், அதிமுகவும், பாஜகவும் லோக்சபா தேர்தலுக்கு தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அணிக்குச் செல்லுமா, பாஜக அணிக்குச் செல்லுமா என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளன. கட்சிகளின் விளம்பர டீம்கள் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க, எதிர் அணியை குறிவைத்து தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிக்கு வரி வருவாய் பகிரிவில் அநீதி இழைப்பதாக குற்றம்சாட்டி வரும் திமுக, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 'அல்வா' கொடுத்துள்ளதாக விமர்சிக்கும் வகையில், அல்வா பொட்டலங்களை மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில், தமிழ்நாட்டுக்கு Zero என "முட்டை" படம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் வடிவேலு, நகைச்சுவை காட்சி ஒன்றில் தன்னிடம் எதுவும் இல்லை என தனது ட்ரவுசர் பாக்கெட்டை ஆட்டிக் காட்டும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. பாஜகவை டார்கெட் செய்து சென்னையின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக அண்மையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 'கண்டா வரச் சொல்லுங்க' என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டினர். "என்னைத் தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறியவரை கண்டா வரச் சொல்லுங்க" என பல விதங்களில் போஸ்டர்களை ஒட்டினர்.
அதிமுகவின் 'கண்டா வரச் சொல்லுங்க' பிரச்சாரத்தை ஓவர்டேக் செய்யும் வகையில், அதே ஸ்டைலில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டினர். அந்த போஸ்டர்களில், 'பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க' என திமுகவினர் போஸ்டர்களை ஒட்டினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications