இதுதான் சனாதனம்! ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி! அப்போ பிரதமருக்கும் இதே ப்ரோட்டோகாலா? திமுக கேள்வி
சென்னை: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததை திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று மாலை ரஜினிகாந்த் முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவர் வீட்டு வாசலுக்கு வந்த போதே ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து மரியாதையை செய்தார். நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி, அவர் கோவில் பதவிகளிலும் இருக்கிறார், அவர் தலைமை பூஜாரியாகவும் இருக்கிறார். அதனால் அவரின் காலில் விழுந்தார் என்று ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்.
ஆனால் மோடி காலில் விழாமல், ஆதித்யநாத் காலில் ரஜினி விழ வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதன்படி ஆதித்யநாத் எதிர்கால பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளதாக பாஜக கருதுகிறது. மோடிக்கு பின் யோகிதான், ஏன் 2024 தேர்தலில் கூட ஆதித்யநாத் பிரதமராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதை எல்லாம் மனதில் வைத்துதான் ரஜினிகாந்த் ஆதித்யநாத் காலில் விழுந்தார். இதனால்தான் மோடி காலில் கூட விழாத ரஜினி தன்னைவிட 20 வயது குறைந்தவரின் காலில் விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விளக்கம்: இதற்கு வலதுசாரி ஆதரவாளர், ஸ்ரீராம் ஷேசாஸ்த்திரி அளித்த பதிலில் சந்நியாசி ஆகிவிட்டால் வயது வித்தியாசம் கிடையாது, அவர் குரு ஸ்தானம் பெறுகிறார், இது எங்கள் சனாதன தர்மத்தின் வழக்கம், சில கழிசடைகளுக்கு அது புரியாது, என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததை திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இதே புரோட்டோ கால் தானா??? ஒரு டவுட்டு... என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக ரஜினி உறவு: பாஜகவுடன் இப்போது ஒன்றும் ரஜினிகாந்த் நெருக்கமாகவில்லை. அவர் பல காலமாகவே பாஜகவுடன் நெருக்கமாகவே உள்ளார். உதாரணமாக 2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது.
அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்றும் ரஜினி பேசினார். அவரின் கட்சியில் அண்ணாமலை அப்போது இணைய போவதாகவும் பேச்சுக்கள் வந்தன. ஆனால் கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து விலகினார்.
ஆனால் என்னவோ அதன்பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ரஜினி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவுடன் நெருக்கம் ஆகும் விதமாக ரஜினிகாந்த் ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications