அதிமுகவை பாஜக முந்துதா? ஆனா இந்த கணக்கு புரியலையே.. 10 வருஷத்துக்கு முன்னாடி பாஜக பண்ணதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக லோக்சபா தேர்தலில் உருவெடுக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்து கணிப்புகள் குறித்து திமுக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

DMK questions how will BJP over take AIADMK to be in second place in Lok Sabha elections in TN?

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல்வேறு கணிப்புகள் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும் என்று கணித்து உள்ளன.

பல கணிப்புகள்: தமிழ்நாட்டை சேர்ந்த சில செய்தி நிறுவனங்கள் கூட பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறும், அல்லது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவிகித அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்து கணிப்புகள் குறித்து திமுக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது. திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி செய்துள்ள போஸ்டில், பாஜகவின் 10 வருட பழைய போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். 2014ல் பாஜக செய்த போஸ்டில், தமிழகத்தில் இரண்டாம் இடத்தில பா ஜ க ! திகைப்பூட்டும் அதிரடி சர்வே ரிசல்ட்...சத்தியம் செய்த தமிழ்நாட்டு மக்கள் ! அதிர்ச்சியில் ஜெயலலிதா ? என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்து ராஜீவ் காந்தி, 2014லிலேயே, தேர்தல் கருத்து கணிப்புகளில், 2வது பெரிய கட்சியாக பரிணமித்திருந்த பாஜக, இப்போதைய கணிப்புகளில் 3வது இடமா? என்ன கொடுமை? 10 வருட மோடி ஆட்சியின் சாதனையா, இல்லை யாத்திரையின் வேதனையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அப்போதே இரண்டாம் இடம் எடுத்துவிட்டதாக பாஜக கூறியதை இப்போது கிண்டல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+