எருமை மாடுகள் கிரேட் எஸ்கேப்.. பசுமாடு நிலைதான் பரிதாபத்திற்குரியது.. திமுகவின் ராஜீவ்காந்தி தாக்கு
பிப்ரவரி 14ம் தேதி பசு அரவணைப்பு தினம் என விலங்குகள் நல வாரியம் அறிவித்ததை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார்
சென்னை: பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக விலங்குகள் நல வாரியம் அறிவித்ததை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பசுமாடுகளின் நிலை தான் பரிதாபத்திற்குரியது! என்று கூறி ஒரு ட்விட் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிலடியும் கொடுத்துள்ளனர். பாஜக மற்றும் திமுகவினர் இந்த ட்விட்டிற்கு கீழ் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம்.. உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தின கொண்டாட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஓட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். சிறுநகரங்களில் பூங்காக்களில் காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். காதலர்கள் பூங்காக்களில், கடற்கரைகளில் மலைவாசல் தளங்களில் ஜோடி ஜோடியாக சுற்றித்திறிவதை காதலர் தினத்தில் பார்க்க முடியும்.

காதலர் தினம்
காதல் ஜோடிகள் பிப்ரவரி 14ம் தேதி பரிசு பொருட்களை பரிமாறி கொள்வது, காதலை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவது என சுவாரஸ்மான சம்பவங்கள் அதிகமாக நடைபெறும். ஆனால் இந்த காதலர் தின கொண்டாட்டங்கள் கலாச்சார சீர்கேடு என்று இந்தியாவில் எதிர்ப்பும் உள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை புறந்தள்ளிவிட வேண்டும் என்று ஒரு தரப்பும், காதல் பழங்காலத்தில் இருந்து இருக்கிறது எனவே அதை வெளிக்காட்டும் நாளாக காதலர் தினம் இருப்பது நல்லது என்று இன்னொரு தரப்பும் சொல்கிறார்கள்.

காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இப்போது காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. பெரு நகரங்களில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம். மேலும் அன்றைய தினத்தில் காதல் ஜோடிகள் பரிசு பொருட்கள் பரிமாறி கொள்வது, காதலை வெளிப்படுத்துவது என சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறும்.

எல்லை மீறல்
இதனிடையே காதலர் தினத்தை எதிர்க்கும் அமைப்பினர், இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை விரட்டிய சம்பவங்கள் பல நடந்துள்ளது. கழுதைக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும், காதலர்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் நடந்துள்ளது.. அதேபோல் சில காதல் ஜோடிகள் பொதுவெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வது, பூங்காக்களில், கடற்கரைகளில் உள்ள மறைவிடங்களில் காதல் என்ற பெயரில் எல்லை மீறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

எருமைகள் எஸ்கேப்
இந்நிலையில் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று மத்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், "பசு பால் தருவதோடு மட்டுமல்ல அன்னையாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வருகிற 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம். பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட்டு நமது பாரம்பரியத்தை பாதுகாப்போம். வேதங்களில் பசுக்களின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த மரபுகளை தொடர்ந்து செய்ய 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம் " இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications