பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிப்பதா- திமுக ராஜீவ் காந்தி கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வசதியாக தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம், புதுவைக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்தப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை தேதியும் ஜூன் 4 என நீண்ட இடைவெளியாகிறது. இதனால் மக்களவை தேர்தலில் பாஜக வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்யும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார்.
அது போல் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் மிக்ஜாம் புயலின் போது ஒரு முறை கூட தமிழகத்திற்கு பிரதமர் வரவில்லை. ஆனால் இந்த ஒரு மாதத்தில் 4 முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார். எங்களுக்கு அப்போதே தெரியும் தமிழகத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் அறிவிக்கப்படும் என்று! அது இன்று நிரூபணமாகியுள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என விமர்சித்தார்.
டெல்லியில் இன்று மதியம் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார். மேலும் முதல் கட்டமாக தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றாலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதிதான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடி ஏன் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்தார் என்பது இப்போது புரிகிறது.
தேர்தல் தேதியை முடிவு செய்வது தேர்தல் ஆணையமா? பிரதமர் மோடியா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது என செல்வப்பெருந்தகை சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications