என்னது அண்ணாமலை தனி கட்சி தொடங்குகிறாரா? மோடி கடுமையாக விமர்சிக்கும் 'அந்த போட்டோ' எப்படி?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புது கட்சி தொடங்கப் போகிறாரா? என திமுகவின் மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக இடம் பெற்றிருந்தது அதிமுக. டெல்லியில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் மோடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமரவைக்கப்பட்டார்.

அண்ணாமலையால் கூட்டணி முறிவு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குடைச்சல் காரணமாக தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. அதிமுகவின் இந்த முடிவு தேசிய அளவில் பாஜகவுக்கு கடும் விமர்சனங்களை உருவாக்கி கொடுத்துவிட்டது. இன்னமும் டெல்லி பாஜக மேலிடத்தால் அதிமுகவின் கூட்டணி முறிவு அறிவிப்பை ஜீரணிக்க முடியாத நிலைதான் எனவும் கூறப்படுகிறது.
மீண்டும் சீண்டிய அண்ணாமலை: இருந்த போதும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிமுகவினர் ஆதங்கம். இந்நிலையில் சென்னையில் நேற்று அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுக- பாஜக இடையேதான் போட்டி என அதிமுக மீண்டும் சீண்டினார். டெல்லி பாஜக மேலிடமோ, அதிமுக எப்படியும் திரும்பி வரும் என இலவு காத்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்துவிடவே கூடாது என்கிற அடிப்படையில் இப்படி கருத்து தெரிவிக்கிறார் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.
அண்ணாமலை என்ன புதுகட்சி ஆரம்பிக்க போறீங்களா Mr Ex officer @annamalai_k
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) October 5, 2023
எல்லா பிரச்சனைக்கு காரணம் நேருதானு மோடி சொல்கிறார்…!!
இன்று நீங்கள் நேரு படம் வச்சு
அஞ்சலி செலுத்துறீங்க….🤣🤣 pic.twitter.com/NixO2CmyEF
ஜவஹர்லால் நேரு படம்: இதனிடையே சென்னையில் அண்ணாமலை நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை முன்வைத்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா என அத்தனை பாஜக தலைவர்களும் நாட்டின் நடந்த அத்தனை மோசமான நிகழ்வுகளுக்கும் முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என இடைவிடாமல் விமர்சிக்கின்றனர். ஆனால் சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு படமும் இடம் பெற்றிருந்தது. இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அண்ணாமலை புது கட்சியா?: திமுகவின் மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில், அண்ணாமலை என்ன புதுகட்சி ஆரம்பிக்க போறீங்களா Mr Ex officer @annamalai_k எல்லா பிரச்சனைக்கு காரணம் நேருதானு மோடி சொல்கிறார்...!! இன்று நீங்கள் நேரு படம் வச்சு அஞ்சலி செலுத்துறீங்க....என பதிவிட்டுள்ளார். அத்துடன் பாஜக அலுவலகத்தில் நேரு படம் வைக்கப்பட்டுள்ள வீடியோவையும் பகிர்ந்துள்ளார் ராஜீவ் காந்தி.












Click it and Unblock the Notifications