நடிகையின் பிகினி, ராகுலின் டீசர்ட் வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜகதான்.. திமுக விளாசல்
சென்னை: நடிகையின் பிகினியை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜகதான் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து இணையத்தில் ஒரு பதிவு வேகமாக பரவியது. அதில் 3.48 லட்சத்திற்கு அண்ணாமலை வாட்ச் கட்டியுள்ளார் என குறிப்பிட்டு அவர் கட்டியிருந்த வாட்ச் , அதன் விலை குறித்த புகைப்படத்தையும் சிலர் வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பேசுகையில் இப்போது புதிதாக நாம் போட்டிருக்கும் சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள். இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகள் செய்தார்கள்.

ரபேல் விமானம்
இது சிறப்பு பதிப்பு. ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். ரபேல் விமானத்தில் பயணிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, அந்த வாட்ச்சையாவது கட்டிக் கொள்கிறேன். நான் கட்டியிருப்பது 149ஆவது வாட்ச் ஆகும். இந்த வாட்ச்கள் மொத்தமாக இந்தியாவில் 500 தான் உள்ளன. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும்.

பொக்கிஷம்
ரபேல் நமக்கு கிடைத்த பொக்கிஷம். ரபேல் விமானம் நம்மிடம் இருப்பதால்தான் சீனா கூட நம்மிடம் வாலாட்டுவதில்லை. எனக்கு பிடித்த வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் அண்ணாமலையை போன்று ஏழை எளியவர்களும் வாங்கி மகிழலாமே என அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

8 லட்சம் வாட்ச்
இந்த நிலையில் அண்ணாமலை பேட்டி கொடுப்பதற்கு முன்பு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Mr @annamalai_k கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக ராஜீவ் காந்தி
அது போல் ராஜீவ் காந்தி மற்றொரு ட்வீட்டில் அதாவது அண்ணாமலை பேட்டி கொடுத்த பிறகு வெளியிட்ட ட்வீட்டில், புதிதாக watch,சட்டை போன்ற தனிப்பட்ட பொருட்களை வைத்து அரசியல் செய்கிறார்கள்-அண்ணாமலை! ராகுல்காந்தி போட்ட டிஷர்டையும் நடிகை போட்ட பிகினியையும் வைத்து அரசியல் செய்கிற கட்சி சாட்சாத் பிஜேபிதான்!! என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி டீசர்ட்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி அணிந்திருந்த டீசர்ட் விலை ரூ 41 ஆயிரம் என பாஜக புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. இதை மறுத்த காங்கிரஸ், இந்த சட்டைகள் திருப்பூரில் இந்திய தேசிய ஒற்றுமை பயணத்திற்காக ஆர்டர் கொடுத்தது என பதில் அளித்தது. அது போல் பதான் திரைப்படத்தில் காவி உடை அணிந்து ஆபாசமாக தீபிகா படுகோன் நடனமாடியுள்ள நிலையில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் படம் வெளியீட்டீற்கு அனுமதிக்க முடியாது என்றும் இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications