ஓ ரபேல் வாட்சை இப்படித்தான் வாங்குனாரா? திமுக ரிலீஸ் செய்த வீடியோ! அண்ணாமலைக்கு எகிறிய பிரஷர்
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை ரபேல் வாட்சை வாங்கியது எப்படி.. அல்லது அவருக்கு யாராவது கிப்ட் கொடுத்தனரா என்று கேள்வியை திமுக தொடர்ந்து முன் வைத்து வருகிறது. இது தொடர்பாக இன்று திமுகவினர் முக்கியமான வீடியோ ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹாட் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 ரூபாய் கொண்டது.
இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதை அண்ணாமலை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் அண்ணாமலை இந்த பில்லை சமர்ப்பிக்கவில்லை.

செந்தில் பாலாஜி
இந்த பில் குறித்து முதலில் கேள்வி எழுப்பியது அமைச்சர் செந்தில் பாலாஜிதான், பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என்று கேட்டுள்ளார். சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருந்தார்.

ராஜிவ் காந்தி
திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி ஒருபடி மேலே போய்.. அண்ணாமலைக்கு அந்த வாட்ச் அவர் போலீசாக இருக்கும் போது லஞ்சமாக வந்தது என்று கூறினார். அவர் செய்த ட்விட்டில், கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்லல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!, என்று ராஜிவ் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

வீடியோ
இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏ, ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் அண்ணாமலை வாங்கிய வாட்ச் அவருக்கு கிப்ட்டாக வந்ததுமே.. நான் கூட எதோ காசு கொடுத்து வாங்கியதோ என்று நினைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் ஒருவர், ஊழல் பண்ணிட்டு தேச பக்தி என்று சொல்லி சமாளிக்க பார்க்கிறார். அனைத்திலும் தேசபக்தி என்பதை சொல்லிவிட்டு ஊழல் செய்கிறார்கள். ரபேலில் ஊழல் செய்துவிட்டு அதற்கு கிப்ட்டாக இந்த வாட்சை அவர்கள் பெற்று இருப்பார்கள் என்று கூறியுள்ளார். பொது மக்களிடம் கருத்து கேட்கும் வீடியோ ஒன்றில் அவர் இதை குறிப்பிட்டு உள்ளார். இதைத்தான் திமுக எம்எல்ஏ, ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா ரிலீஸ் செய்துள்ளார்.

விளக்கம்
முன்னதாக இதற்கு அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications