சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“என்ன ஜி.. உங்க குருநாதரே இப்படி திணறுறாப்ள..” - பாஜக அண்ணாமலையை வறுத்தெடுக்கும் திமுகவினர்!

Google Oneindia Tamil News

சென்னை: 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏற கூட தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தி.மு.க எம்.பிக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி ஆங்கிலம் பேச திணறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தி.மு.கவினரை சீண்டி வருவதால், அவரை சமூக வலைதளங்களில் தி.மு.கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக வெங்காயம் மாதிரி.. அந்த 260 பேரை தூக்கிட்டாபோதும்! அடுத்து பாஜக ஆட்சிதான்- அண்ணாமலை நம்பிக்கை திமுக வெங்காயம் மாதிரி.. அந்த 260 பேரை தூக்கிட்டாபோதும்! அடுத்து பாஜக ஆட்சிதான்- அண்ணாமலை நம்பிக்கை

 அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது

அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ‘திராவிட மாயை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏறக்கூட தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது. தமிழக மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது என விமர்சித்தார்.

திராவிட மாடல்

திராவிட மாடல்


மேலும், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். திமுகவை வீழ்த்துவது எளிது. தி.மு.கவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் தி.மு.கவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. தி.மு.கவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. தி.மு.க அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள் என்றும் விமர்சித்தார்.

மத்திய அமைச்சர்களுக்கு

மத்திய அமைச்சர்களுக்கு

அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜ்யசபா எம்.பியும், தி.மு.க வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் செயலாளருமான எம்.எம்.அப்துல்லா, "90% "ஒன்றிய" அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் கூட ஏறத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிதியகங்களிடம் ஒரு பைசா நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது." என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    திராவிட model Vs அண்ணாமலை model ? | DMK IT wing Manushyaputhiran Interview | Oneindia Tamil
    சி.டி.ரவி

    சி.டி.ரவி

    மேலும், தி.மு.க வினர் பலரும், ஆங்கிலம் பேசினால்தான் நன்றாக ஆட்சி செய்ய முடியுமா என்றும், பிரதமர் மோடியை டெலி ப்ராம்ப்ட்டர் இல்லாமல் ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள் என்றும் அண்ணாமலைக்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

    அண்ணாமலைக்கு நெருக்கமான கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயலாளரான சி.டி.ரவி ஆங்கிலத்தில் பேச திணறும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தி.மு.கவின் தருமபுரி எம்.பி செந்தில்குமாரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    English summary
    DMK MP's to BJP Annamalai : அண்ணாமலையின் விமர்சனத்துக்கு தி.மு.க எம்.பிக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க தலைவர் சி.டி.ரவி ஆங்கிலம் பேச திணறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X