சர்வதேச "ரூல்ஸை" மீறிட்டார்! எடப்பாடிக்கு திமுக புது செக்.. உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு! சிக்கல்
சென்னை: டெண்டர் முறைகேட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர். எஸ் பாரதி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடுகளை செய்துள்ளதாக 2018லேயே திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதில்தான் தற்போது உச்ச நீதிமன்ற விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

சிபிஐ
ஆனால் சிபிஐ விசாரணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஸ்டே வாங்கினார். அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவே இல்லை. பல மாதங்களாக வழக்கில் எந்த விசாரணையும் நடக்காமல் இருந்தது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு கடந்த 2 வாரம் முன் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, இன்று வழக்கை (ஆகஸ்ட் 2) விசாரிக்க போவதாக அறிவித்தார்.

விசாரணை
இதையடுத்து வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி தனது உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக புகார் உள்ளது. முக்கியமாக வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் உள்ளது.

புதிய மனு
இந்த வழக்கில் ஆர். எஸ் பாரதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருந்தது. இதற்காக இரண்டு வாரம் அவகாசமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர். எஸ் பாரதி சார்பாக சமீபத்தில் கோர்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், எடப்பாடிக்கு எதிராக திமுகவின் ஆர். எஸ் பாரதி கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. சர்வதேச விதிகளை எடப்பாடி மீறிவிட்டார் என்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

ரூல்ஸ்
இந்த புதிய மனுவில் சர்வதேச உலக வங்கி விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை எடப்பாடி பழனிசாமி மீறிவிட்டார். தனது நெருங்கிய உறவினர்களுக்கு சாலை ஒப்பந்தங்களை வழங்கி அவர் உலக வங்கி விதிகளை மீறிவிட்டார். இதனால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது. அதோடு எடப்பாடி சார்பாக இதற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications