திமுகவுக்கு கிறிஸ்துமஸ்..பாஜகவுக்கு பொங்கல்! தமிழ்நாட்டுக்கு டிக்கெட் போடும் மோடி,யோகி! அப்போ விஜய்?
சென்னை: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் பரபரப்பாகி உள்ளது. பண்டிகைகளை வைத்து வாக்கு அரசியல் செய்ய தலைவர்கள் தீவிரமாகி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் திருப்பரங்குன்றத்துக்கு யோகி ஆதித்யநாத் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதற்கிடையே விஜயும் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். மேலும், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன.

தமிழ்நாடு அரசியல் 2026
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் பொருத்தவரை தமிழகத்தில் நான்கு முனை போட்டி தான் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 அணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றாக சிறுபான்மையினர் வாக்கு இருக்கிறது.
பாஜக பொங்கல் அரசியல்
பாஜகவை பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தினரை குறி வைத்து தான் தேர்தலை சந்திக்கிறது. அந்த வகையில் பிஹாரில் எம்பிசி, தலித் என அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து இந்துக்கள் என்ற ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வந்து தேர்தலை சந்தித்தது. ஆனால் தமிழகத்தில் அது எடுபடுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் பாஜக அதை நோக்கியே பயணிக்கிறது. அதன் காரணமாகத்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது.
யோகி ஆதித்யநாத்
வரும் நாட்களில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட வடமாநில தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி மதப் பண்டிகைகளை கையில் எடுக்கத் தொடங்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், தவெல தலைவர் விஜய், பிரதமர் மோடி என அடுத்தடுத்து மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்.
பாஜக பொங்கல் அரசியல்
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார் என சொல்லப்படுகிறது. இதே போல அடுத்தடுத்து மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வர இருப்பதாக சொல்கிறது பாஜக வட்டாரங்கள்.
விஜய் அரசியல் திட்டம்
அடுத்ததாக சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைக்கும் வகையில் விஜய் திருச்சியில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாட இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியை குறிவைத்து விஜய் களமிறங்கலாம் என்கின்றனர். விஜய் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியதும் திருச்சி கிழக்கு பகுதியில் இருந்துதான்.
தமிழக வெற்றிக் கழகம்
கிறிஸ்தவ வாக்குகள் அதிகமாக இருக்கும் அங்கு தற்போது திமுகவின் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏவாக இருக்கிறார். அதனை குறி வைத்துதான் விஜய் களமிறங்குகிறார். இன்னும் சில நாட்களில் திருச்சியில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் விழா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொண்டாட இருக்கும் நிலையில் விஜய் பங்கு இருக்கிறார். மேலும் ஜனவரியில் பொங்கல் விழாக்களையும் தமிழக வெற்றிக்கழகம் கொண்டாட இருக்கிறது.
திமுக கிறிஸ்துமஸ் அரசியல்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலினும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி நெல்லை நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் பங்கு தந்தைகள், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே கிறிஸ்தவர்களுக்கு திமுகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி பயணங்களின் போதும் கிறிஸ்தவ மத போதகர்கள், பங்கு தந்தைகள், திருத் தந்தையர்களை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications