ஏன் விஜய் உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? 15 வார்த்தையை வச்சிகிட்டு.. ஐயோ! கரு. பழனியப்பன் விமர்சனம்
சென்னை:விஜய் உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? ஏன் ஒரு மேடை போட்டு அதில் 4 நிர்வாகிகளை நிற்க வைத்து, அவர்களுடன் பேச முடியாதா, தனியாக பேருந்தில்தான் பேசுவீர்களா என திமுகவை சேர்ந்த கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், ஈரோட்டுல பொதுக் கூட்டம் நடந்த இடம் 80 ஏக்கர். அந்த இடத்தில் ஒரு மேடை போட்டு கூட ஒரு 4 நிர்வாகிகளை நிற்க வைக்க முடியாதா? பஸ்ல தனியார் நின்று பேசுகிறார். ஏன் மேடை போட்டு ஒரு 4 பேர் பக்கத்துல நிற்க முடியாதா?

உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? செங்கோட்டையன் பக்கத்துல நின்றால் சவமாகிவிடுவீங்களா, மேடை போட்டா பக்கத்துல ஆள் நிப்பாங்க, நின்றால் தோள்கள் உரசும். இதுதான் மாற்றமா? வைப் பண்றீங்களா? இதுதான் பிளாஸ்ட்டா, ஒரு 15 வார்த்தையை வச்சிக்கிட்டு இவர் படுத்துற பாடு இருக்கே ஐயோ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விஜய் நல்லது செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இதுவரை ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா? கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு பொதுக் கூட்டம் கூட நடத்தவில்லை, இதில் புஸ்ஸி ஆனந்தே வெளியே வா என சொந்த கட்சிக்காரர்களே போராட்டம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் எப்படி நல்லது நடக்கும்?
பெரியார் குறித்து பேப்பர் இல்லாமல் விஜய் பேசிடட்டும். ஒரு நிமிடம் பேசினால் கூட போதும். பிறகு என்ன சொன்னாலும் நான் செய்கிறேன். தமிழகத்தில் திராவிடத்தை விட்டுவிட்டு யாரெல்லாம் விலகுகிறார்களோ அவர்களை காலம் அடித்து உள்ளே கொண்டு வரும்.
கேரக்டரை புரிஞ்சிக்க மாட்டீங்களே என சொன்ன விஜய், அடுத்த வரியில் நாங்கலாம் வேற மாதிரி என்கிறார். இவர்களுக்கு vocabulary-யே தெரியாது. சிந்தனை கிடையாது. ஏதோ 15 வார்த்தைகளை வைத்துக் கொண்டு பேசி வருகிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் பிளாஸ்ட், வைப், வேற மாதிரி இவைதான். யாராவது இலக்கியவாதி வந்து எழுதி கொடுத்தால் பேசுவார்.
விஜய்க்கு பெரும் கூட்டம் கூடியது. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அந்த பெருங்கூட்டம் போகும் போது வீட்டிற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறது என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டியது. விஜய்க்கு கூடும் இளைஞர்கள் கூட்டத்தை திருத்த வேண்டும். இவர்கள் எல்லாம் தற்குறிகள்தான். நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திய கட்சிக்காரரை போலீஸார் அடித்ததும் வழிவிடுகிறார்கள். எனவே கட்சி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
சினிமா போல் நினைத்துக் கொண்டு சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை செய்கிறார்கள். ஜட்ஜ் சொன்னாலே போலீஸ் கேட்கலை, இந்த தற்குறிகள் சொன்னாவா கேட்டுட போறாங்க? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பக்கமா, இல்லை அரசு பக்கமா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு யாரையும் சாராமல் ஏதோ சில கருத்துகளை கூறிவிட்டுச் சென்றால் என்ன அர்த்தம் என பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்துள்ளார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications