சென்னை திமுக பிரமுகர் கே.கே.நகர் தனசேகரனுக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு
சென்னை: சென்னை திமுக பிரமுகரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே. நகர் தனசேகரன் பட்டப்பகலில் திமுக அலுவலகத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்சென்னை திமுகவின் முக்கிய பிரமுகராக இருப்பவர் கே.கே.நகர் தனசேகர். சென்னையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். திமுக கவுன்சிலராக இருந்த தனசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

சென்னை கே.கே.நகர் திமுக மகளிரணி பிரமுகர் பால்மலர் கொலை வழக்கில் தனசேகரனுக்கும் தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்மையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக தனசேகரன் நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சென்னையில் கே.கே.நகர் பகுதி திமுக அலுவலகத்தில் இன்று தனசேகரன் அமர்ந்திருந்தார்.
அப்போது அரிவாள் சகிதமாக உள்ளே நுழைந்த மர்ம நபர் அமுதா என்ற பணிப்பெண்ணை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதை தடுக்க முயன்ற தனசேகரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த தனசேகரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்விபட்ட தனசேகரன் ஆதரவாளர்கள் அந்த தனியார் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.,
2 பேர் கைது
இதனிடையே கே.கே.நகர் தனசேகரனை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications