Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி கைதுக்கு பத்மபிரியா ஆவேசம்.. "பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் அரசியல் நடக்குது "!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் பத்மபிரியா வீடியோ வெளியிட்டுள்ளார். பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் ஒரு அரசியல் நடக்கிறது என்று பத்ம பிரியா வீடியோவில் கூறியுள்ளார்.

நேற்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

DMKs Padmapriya has released a video condemning the arrest of Minister Senthil Balaji

இதனிடையே காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளும் வெளியானது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் தொட்ர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேட்டு, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட திமுகவினர் பலரும் ஓமந்தூரார் மருத்துவனைக்கு விரைந்து வந்து நலம் விசாரித்தார்கள்.

முதல்வர் முக ஸ்டாலினே நேரடியாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் நேற்று வெளியானது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் எனில் அவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சித்ரவதை செய்யப்படுவதாக திமுகவினர் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர். அவரை 2015 வழக்கிற்கு இப்போது கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திமுகவினர் பலரும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் ஒரு அரசியல் நடக்கிறது என்று திமுகவைச் சேர்ந்த பத்ம பிரியா ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இதுபற்றி வீடியோவில் கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அமைச்சருக்கே இந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட ஒரு நிலைமை என்றால், அப்ப சாமானியர்களின் நிலைமை?, ஒன்றிய பாசிச ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பாஜக எந்த மாநிலத்திற்குள் எல்லாம் நுழைய முடியவில்லையோ, அந்த மாநிலத்தில் எல்லாம் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுக்கிறது. ஆளுநர் மூலமாகவோ, வருமான வரித்துறை ரெய்டு மூலமாகவோ கொடுக்கிறது. இது எப்பவுமே பண்ணிக்கிட்டு இருக்குற ஒன்றுதான்.

ஆனால் அதை எல்லாம் தாண்டி, கொலை பண்றவன், கொள்ளை பண்றவன், கற்பழிக்கிறவன், நாட்டை அடமானம் வச்சவன், எல்லாமே உங்கக்கூட(பாஜக) இருக்கான். இல்லை உங்க கூட போஸ்டிங்லயே உட்கார்ந்துகிட்டு இருக்கான், வெளியில் இருந்து உங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான். அவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்கள்ல.. அவங்க மீதெல்லாம் எந்த ரெய்டும் கட்டவிழ்த்து விடப்படாதுல்ல..

DMKs Padmapriya has released a video condemning the arrest of Minister Senthil Balaji

இங்க பெண்கள் வந்து கற்ப்பிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். உத்தரகாண்டில் மதக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் இன்னமும் பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஐடி ரெய்டு நடக்குது.. எந்த மாநிலத்தில எல்லாம் பிரச்சனை இருக்கோ, அங்கு ஒரு குழப்பத்தை கிரியேட் செய்ய ஒரு ஆளை அனுப்பி வச்சிடுவீங்க.. நீங்க அங்க இருந்து உங்களால பண்ண முடிஞ்சதே பண்ணிக்கிட்டே இருப்பீங்க..

இந்த பணத்துக்கும் பிணத்துக்கும் நடுவில் பண்ற அரசியல மக்கள் பார்க்கலைன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா, உங்களுக்கு எதிராக இன்றைக்கு எல்லா சக்திகளும் ஒன்றுபட ஆரம்பித்துவிட்டார்கள். 2024 தேர்தல் பயம் தான் இது அப்படீன்றது வெளிப்படையாக தெரிகிறது" இவ்வாறு பத்மபிரியா ஆவேசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+